Header Ads



கொழும்பில் முக்கியதஸ்தர்களின், பாதுகாப்பு கேள்விக்குறியாகிறதா..?

கொழும்பில் அண்மை நாட்களாக துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமை அடுத்து முக்கியதஸ்தர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது.

புலனாய்வுத் துறையினர் இந்தக் கோரிக்கையை அரசாங்கத்திடம் விடுத்துள்ளனர்.

பாதாள உலக குழுவினர் வசம் அதிக ஆயுதங்கள் உள்ள நிலையிலேயே இந்த துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

கடந்த வாரத்தில் மாத்திரம் இடம்பெற்ற சம்பவங்கள் யாவும் அரசியலுடன் தொடர்புடைய சம்பவங்களாகவே கருதப்படுகின்றன.

இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்றவர்கள் மற்றும் தனியார் பாதுகாப்பு பிரிவுகளின் ஆயுதங்கள் என்ற பெருந்தொகை ஆயுதங்கள் இன்று பயன்பாட்டில் உள்ளன.

எனவே முக்கிஸ்தர்கள், புலனாய்வுப் பிரிவினரின் ஆலோசனைகளை ஏற்று நடக்குமாறு கோரப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.