மாணவர், பெற்றோர், ஆசிரியர் முன் மைத்திரியின் ஆவேசமான உரை
பிள்ளைகளினதும், தாய்மார்களினதும் உயிர்களுக்கு விலைபேசும் ஒரு காலகட்டத்தில் அப்பாவி மிருகங்களின் தோல்களை கொடூரமாக உயிருடன் அகற்றும் மிருகத்தனமான மனிதர்கள் வாழும் ஒரு சமூகத்தில் பண்பாடுள்ள எதிர்கால சந்ததியினரை உருவாக்குவதற்கு பாடசாலைகள் முன்னின்று செயற்பட வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
கேகாலை புனித ஜோசப் மகளிர் கல்லூரியின் (24-03-2016) முற்பகல் வருடாந்த பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
பௌதீக வளங்களில் நாடு எவ்வளவுதான் அபிவிருத்தி அடைந்த போதும் அங்கு வாழும் மனிதர்கள் பண்பாடற்றவர்களாக இருக்குமிடத்து அந்த அபிவிருத்திகளின் பயனை அடைய முடியாதென ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் அமைச்சர்களான கபீர் ஹசிம், ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, இராஜாங்க அமைச்சர் சம்பிக்க பிரேமதாச, சப்பிரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் பாடசாலையின் அதிபர், ஆசிரியர் குழாம், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment