சிங்கள சகோதரரின் துஆ தொடர்பான விமர்சனங்களும், விளக்கங்களும்..!!
-Mohamed Nizous-
சகோதர சமூகத்தை சார்ந்த ஒருவரின் மொபைல் போன் தொலைந்து மீண்டும் கிடைத்த சம்பவம் பற்றி நான் எழுதியதற்கு பல விமர்சங்கள் எழுந்துள்ளன.
பெரும்பாலானோர் அதனை அல்லாஹ்வின் அற்புதமாக ஏற்றுக் கொண்டாலும் சிலர் கேள்விகளையும் விமர்சங்களையும் முன் வைத்துள்ளனர். அது தொடர்பாக சில விளக்கங்களை தர விரும்புகிறேன்.
1. இஸ்லாத்தில் இப்படி ஒரு துஆ உள்ளதா?
Sahih Muslim Book 4 Hadith 1999
حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، وَقُتَيْبَةُ، وَابْنُ، حُجْرٍ جَمِيعًا عَنْ إِسْمَاعِيلَ بْنِ جَعْفَرٍ، - قَالَ ابْنُ أَيُّوبَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ، - أَخْبَرَنِي سَعْدُ بْنُ سَعِيدٍ، عَنْ عُمَرَ بْنِ كَثِيرِ بْنِ أَفْلَحَ، عَنِ ابْنِ، سَفِينَةَ عَنْ أُمِّ سَلَمَةَ، أَنَّهَا قَالَتْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " مَا مِنْ مُسْلِمٍ تُصِيبُهُ مُصِيبَةٌ فَيَقُولُ مَا أَمَرَهُ اللَّهُ إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ اللَّهُمَّ أْجُرْنِي فِي مُصِيبَتِي وَأَخْلِفْ لِي خَيْرًا مِنْهَا . إِلاَّ أَخْلَفَ اللَّهُ لَهُ خَيْرًا مِنْهَا " . قَالَتْ فَلَمَّا مَاتَ أَبُو سَلَمَةَ قُلْتُ أَىُّ الْمُسْلِمِينَ خَيْرٌ مِنْ أَبِي سَلَمَةَ أَوَّلُ بَيْتٍ هَاجَرَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم . ثُمَّ إِنِّي قُلْتُهَا فَأَخْلَفَ اللَّهُ لِي رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم . قَالَتْ أَرْسَلَ إِلَىَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَاطِبَ بْنَ أَبِي بَلْتَعَةَ يَخْطُبُنِي لَهُ فَقُلْتُ إِنَّ لِي بِنْتًا وَأَنَا غَيُورٌ . فَقَالَ " أَمَّا ابْنَتُهَا فَنَد
Umm Salama reported Allah's Messenger (Peace be upon him) as saying: If any Muslim who suffers some calamity says, what Allah has commanded him," We belong to Allah and to Him shall we return;
O Allah, reward me for my affliction and give me something better than it in exchange for it," Allah will give him something better than it in exchange. When Abu Salama died she said: What Muslim is better than Abu Salama whose family was the first to emigrate to the Messenger of Allah (Peace be upon him). I then said the words, and Allah gave me God's Messenger (Peace be upon him) in exchange. She said: The Messenger of Allah (Peace be upon him) sent Hatib b. Abu Balta'a to deliver me the message of marriage with him. I said to him: I have a daughter (as my dependant) and I am of jealous temperament. He (the Holy Prophet) said: So far as her daughter is concerned, we would supplicate Allah, that He may free her (of her responsibility) and I would also supplicate Allah to do away with (her) jealous
2. இந்த துஆவை ஓதினால் காணாமல் போன மலேஷியன் பிளைட் கிடைக்குமா?
இந்த துஆவை ஓதினால் இழந்ததை விட சிறந்தது கிடைக்கும் என்று கூறியது நானோ அல்லது அந்த ஹாஜியாரோ அல்ல.ரஸூலுல்லாஹ் சொன்னார்கள். இன்ஷா அல்லாஹ் மஹ்சரில் சந்தித்தால் அவர்களிடமே இதைக் கேளுங்கள்.
3.இதை ஓதினால் இழந்ததெல்லாம் கிடைக்குமா?
இது மார்க்கம் . மெஜிக் அல்ல. அல்லாஹ் யாருடைய துஆவை அங்கீகரிக்கின்றானோ அவர்களுக்குக் கிடைக்கும்.
சிறந்தது கிடைக்கும் என்றே ஹதீஸ் கூறுகிறது. எது சிறந்தது என்று தீர்மானிக்க வேண்டியது இறைவனே அன்றி பேஷ்புக்கில கொமண்ட்ஸ் எழுதுபவர்கள் அல்ல. அந்த சகோதரர்க்கு போண் சிறந்தது என்று தீர்மானித்த இறைவன் சிலருக்கு இவ்வுலகில் கொடுக்காமல் மறுமையில் சிறந்ததைக் கொடுக்கத் தீர்மானிக்கலாம். அதைப் பற்றிக் கேள்வி கேட்க யாருக்கும் அதிகாரம் இல்லை.
4.இது தப்லீக் கப்ஸாவா?
தப்லீக்கில் கூறப்பட்டதாக சில உண்மையான அல்லது பொய்யான சில சம்பவங்களைக் கூறி இதுவும் அது போன்ற ஒன்றுதான் எனப் பலர் விமர்சித்து உள்ளனர். இது தப்லீக் செயற்பாட்டின் மகிமை என்று நான் குறிப்பிட்டேனா? இந்த சம்பவத்துக்கும் தப்லீக் செயல்பாட்டுக்கும் ஏன் முடிச்சுப் போடப் படுகிறது?. ஒரு தனி நபர் பயணத்தில் இன்னொருவருக்கு ஒரு துஆவைக் கற்றுக் கொடுக்கின்றார். அது ஒரு வித்தியாசமான விளைவை ஏற்படுத்துகிறது. இது ஒரு தனிப்பட்ட நிகழ்வு. அந்த ஹாஜியார் தப்லீகை சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்துக்காக அது கப்ஸாதான் என்று கூறுவதன் லாஜிக் புரியவில்லை.
5.சம்பந்தப்பட்டவர்களின் விபரங்களை ஏன் வெளியிடவில்லை.?
யார் எவர் என்று அறியாத நிலையிலேயே அந்தத் திருடனுக்கும் சிங்கள சகோதரரின் மனைவிக்கும் கேவலமான உறவு இருக்கும் என்று எழுதும் அளவுக்கு தரம் தாழ்ந்த இயக்கவாதிகள் உள்ள நிலையில், அவர்களின் விபரங்களை வெளியிட்டு இப்படியான ஈனப் பிறவிகளின் விமர்சனத்துக்கு உள்ளாக்குவதிலும் அவற்றை வெளியிடாமல் இருப்பதே சிறந்ததாய் தோன்றுகிறது.
6.இதன் லாஜிக் பொருந்தவில்லையே?
எந்த இடத்தில் லாஜிக் ஒத்து வரவில்லை. திருடன் அதே வீட்டுக்கு விற்க வந்தான் என்பது மட்டுமே சற்று வித்தியாசமான நிகழ்வு. ஆனால் அது சாத்தியமே இல்லை என்று கூற முடியுமா?
9.இறை அற்புதமா கப்ஸாவா?
ரஸூலுல்லாஹ்வின் மரணத்தின் பின் எந்த இறை அற்புதமும் நடக்காது. அப்படி நடந்தாலும் நம்பக் கூடாது என்ற நிலைப்பாட்டில் உள்ளவர்கள் தங்கள் ஆதாரங்களை முன் வையுங்கள் இன்ஷா அல்லாஹ் பதில் தருகிறேன்.
10.மிம்பருக்குப் பக்கத்தில் நின்று சொன்னால் அது உண்மையாகுமா?
மிம்பருக்குப் பக்கத்தில் நின்று சொன்னார். அதனால் இதனை நம்புங்கள் என்று நான் எங்கும் குறிப்பிடவில்லை. நான் நேரடியாகக் கேட்டேன் என்பதை நிரூபிக்க இடத்தை ஆதாரமாகக் குறிப்பிட்டேன்.
இறுதியாக.....
தப்லீக்கையோ என்னையோ அல்லது அந்த ஹாஜியாரையோ கேவலப்படுத்த வேண்டும் என்று எழுதுபவர்கள் எழுதுங்கள். பரவாயில்லை. ஆனால் உங்கள் எழுத்துக்களில் இறை அற்புதங்களை மறுத்தல் அல்லது துஆக்களை கேலி செய்தல் என்பன ஏற்பட்டு விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அது உங்களை வழிகேட்டில் ஆக்கி விடும்.
அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர் வழி காட்டுவானாக
விடுங்க சஹோதரா.................இவங்களுக்கு வழிகெட்ட தலைவன் சொன்னால் சஹிஹ் என்று நம்புவாங்கள்....
ReplyDeleteதுஆக்களின் அற்புதம் ஒன்றும் எங்களுக்கு தெரியாமல்லில்லை. மேலும் உங்களுக்கு மேலே கூறப்பட்ட ஹதீஸ் புரியவில்லையா?
ReplyDeleteIt's says on the first line it self " IF ANY MUSLIM, WHO SUFFERS SOME CALAMITY "
இந்த ஒரு விடயமே போதுமே! இது முஸலிம்களுகளுக்கு அதாவது அல்லாஹ்வை நம்பி ஈமான் கொண்டவர்களுக்கு.
இதற்கு வேறு ஏதாவது விளக்கம் கொடுக்கப்போகிறீர்களா?? நீங்கள் கூறியதையே நானும் கூறுகிறேன்.
" முஸலிம்களுக்கு என்று கூரியது நானோ , ஹாஜியாரோ , நீங்களோ அல்ல. அல்லாஹ்வின் தூதர்.
ஒரே ஒரு கேள்வி. phone கிடைத்த இந்த அதிசயமான விடயத்தை மனைவி தன் கணவனிடம் phone போட்டு சொல்லாத்தன் காரணம் என்ன?
நம்மில் அநேகர் மணமுடித்தவர்கள். ஆகவே பெண்ணின் சில தன்மைகளை பற்றி நன்கு ஒரு சிறிய விடயத்துக்கே அவர்கள் excite ஆகுவார்கள்! போன் அதிசயமாக கிடைத்த கதையை சொல்லாமலா இருப்பால்????
மற்றது கள்வன் அந்த ஊரைச்சார்நதவனல்ல. Phone கிடைத்தவுடன் அவளுக்கு கூச்சல் போட்டு ஊரை கூட்டி அந்த கள்வனை பிடித்திருக்கலாம். அவன் அந்த ஊர் இல்லையென்பதால் அவ்வளவு சீக்கிரம் தப்பி ஓடவும் முடியாதிருந்திருக்கும். ( ஒரு வேலை கள்வன் Ducatti காரில் வந்து அதி வேகமாக தப்பிச்சென்றிருக்கலாம் என்று சொல்வீர்களோ தெரியாது)
நுனலும் தன் வாயால் கெடும் என்பத போல சகோதர்ர் Nizous இவ்வாறு கூறுகிறார்.
ReplyDelete"5.சம்பந்தப்பட்டவர்களின் விபரங்களை ஏன் வெளியிடவில்லை.?
யார் எவர் என்று அறியாத நிலையிலேயே அந்தத் திருடனுக்கும் சிங்கள சகோதரரின் மனைவிக்கும் கேவலமான உறவு இருக்கும் என்று எழுதும் அளவுக்கு தரம் தாழ்ந்த இயக்கவாதிகள் உள்ள நிலையில், அவர்களின் விபரங்களை வெளியிட்டு இப்படியான ஈனப் பிறவிகளின் விமர்சனத்துக்கு உள்ளாக்குவதிலும் அவற்றை வெளியிடாமல் இருப்பதே சிறந்ததாய் தோன்றுகிறது."
இதிலிருந்து உங்களுக்கு அந்த அந்நிய சகோதர்ரின் Details தெரியும் ஆனால் மேற்கூரிய காரணத்திறகாக நீங்கள் அதை இங்கு வெளியிடவில்லை.
அப்போ அந்த ஹாஜியார் அந்த சகோதர்ரின் details எல்லாம் சொல்லியுள்ளார்.? அப்படித்தானே?
இங்கு சிலர் முட்டால்தனமாக அந்த சகோதர்ரின் details அய் போட சொன்னதறகாக நீங்கள் ஏன் இப்படி உங்களுக்கு தெரியும் ஆனால் பதியவ்வில்லை என்று சொல்லவேண்டும்?
All knows that we shouldn't Publish anyone's personal detail on a site.
லாஜிக்பற்றி பேசினீர்கள் !
1. எல்லாவற்றையும் பார்த்து சைகை காட்டிக்கொண்டிரிந்த ஹாஜியார் அந்த பிட்பாக்கட் இறங்கியதுமே ( இவர் பிட்பாக்கட் காரணிக்கு பயாமாக இருந்தால்) அந்த அந்நிய சகோதர்ரிடம் சொல்லியிருக்கவேண்டும். இலங்கையில் பொதுவாக உடனே பஸ்சை நிறுத்தி விரட்டிப்பிடிதிருப்பார்கள்.
2. மனைவி கூச்சலிட்டு ஊரைக்கூட்டாத்து.
3. அவளுக்கு பயாமாக இருந்திருந்தால் கள்வன் போன அடுத்த நிமிடமே அயலவர்களுக்கு சொல்லியிருக்கலாம் அல்லது போலிசுக்கு போன் செய்திருக்கலாம்.
4.மனைவி அவருக்கு போன் கிடைத்தை கணவர் வீடு வரும் வரைக்கும் சொல்லமல் இருந்தது
Logic தெரியும் என்கின்ற நீங்கள் இவற்றை அவனின் மனைவி ஏன் செய்யவில்லை என்று லாஜிக்காக திங்க் பன்னி பதில் சொல்லுங்கள்.
ஒரு வேளை போன் கிடைத்தவுடன் அவள் மாற்றுத்திறனாளி (Disabled Person) ஆக மாறிவிட்டால் அதனால் தான் அவள் ஒன்றுமே செய்யவில்லை என்று சொல்லப்போகிறீர்களா?
அல்லது நாம் இவ்வாறு பேசுவோம் அதற்காக நான் அவள் ஏன் ஓன்றுமே செய்யவில்லை எனபதற்கான லாஜிக்கை கூறமாட்டேன் என்று கூறுவீர்களா?
Last but not least I don't belong to any jamath. So I don't hate any jamaaths (not shirk jamaaths ).
????? Oru sambawam wahi alla
ReplyDeleteAllahu Akbar Allah arinthawan
சொல்லக்கூடிய எல்லாவற்றிற்கும் தப்லீக் சாயம் பூசி இஸ்லாத்ததின் உண்மைத் தண்மையைக் கொச்சப் படுத்தும் இக்குருடர்களை கணக்கிலெடுக்க வேண்டாம். ஏனெனில் இவர்கள்தான் லேபல் முஸ்லிம்கள்.
ReplyDeleteமற்ற சமூகங்களுடன் ஒத்துப்போகாத துவேஷம், நம்மவர்களுக்குள்ளேயே வளரும் பிரிவினை, விளக்கம் போதாமல் எழுப்பும் விதண்டா வாதம் போன்றவை தான் அதிகமான கேள்விகளில் காணப் படுகின்றன. இவற்றைக் களையும் வரை அவர்கள் இவ்வாறான கேள்விகளை எழுப்பிக்கொண்டே இருப்பார்கள். துஆக்கள் கேற்கப் பட வேண்டும். அல்லா அவற்றை ஏற்றுக் கொள்வான் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும். மாற்று மத நம்பிக்கையில் உள்ளவர்கள் எல்லோரும் நம்முடன் சேர்ந்து சுவனம் அடையும் நிலையைப் பெற, அவர்கள் அனைவரும் படைத்தவன் ஒருவன் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும் என்பதே நமது அவா. பெருமானார் சல்லல்லாஹு அளைஹிவசல்லம் அவர்கள் நாடியது அது தான். எனவே வீண் கேள்விகளில் இருந்து விலகி முடிவில்லாத சுவன இன்பம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று நாடுவோம்.
ReplyDeletePoluzu Pokka Nalla Kazaihal News Aaha Makkalukku Kidaikka Saiyum Madayar Koottame Waalha?????
ReplyDeleteசகோதரரே ஹாஜியார் சொல்லிக்கொடுத்த துவா இஸ்லாத்ததில் எங்கேஉள்ளது.இதைவிடுத்து உங்கள் வாதத்தை நிறுவ உணர்ச்சிவசப்பட்டு எழுதுவது சரியா.
ReplyDeletejhhjk
ReplyDelete