Header Ads



நான் நேர்மையாக பணியாற்றினேன் - பதவி நீக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு செயலாளர்

நேர்மையான முறையில் பணியாற்றியதற்காகவே தான் பதவிநீக்கம் செய்யப்பட்டதாக பாரிய மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முன்னாள் செயலாளர் லெசில் டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற பாரிய ஊழல்கள் மற்றும் மோசடிகள்,  குறித்து விசாரிப்பதற்காக புதிய அரசாங்கத்தில் ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று செயற்படுகின்றது.

இந்த ஆணைக்குழுவின் செயலாளராக நேற்று வரை லெசில் டி சில்வா என்பவர் கடமையாற்றியிருந்தார்.

இந்நிலையில் திடீரென ஜனாதிபதி செயலாளர் பீ.பி. அபேகோனின் ஒப்பத்துடன் அனுப்பப்பட்டுள்ள கடிதமொன்றின் மூலம் லெசில் டி சில்வா பதவி விலக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட லெசில் டி சில்வா, தான் நேர்மையாகப் பணியாற்றியதற்கான பரிசாக பதவிநீக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

கடந்த அரசாங்கத்தின் மோசடிகள் தொடர்பான விசாரணைகளில் தான் அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாகவும், அவ்வாறிருக்கையில் பதவி நீக்கமானது தனக்கு அதிர்ச்சியளிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கிடையே முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தொடர்பில் ஆதாரமற்ற ஒரு தகவலை பரப்பி, ஊடகப் பிரபலம் தேட முயன்றதன் காரணமாகவே லெசில் டி சில்வாவின் பதவி பறிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க வட்டாரங்களிலிருந்து தெரிய வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. The same things what MR family telling. ..no body can decide they are genuine. Others should decide it.

    ReplyDelete

Powered by Blogger.