Header Ads



யாழ் பெரியமுஹிதீன் ஜும்ஆ, பள்ளிவாசலில் அமைச்சர்கள் குழு


ஊடகத்துறை அமைச்சர், ஊடகத்துறை பிரதி அமைச்சர் மற்றும் இராஜாங்க பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் யாழ் மாவட்ட முஸ்லிம் மக்களின் நிலைபற்றி அறிந்துகொள்ள பெரியமுஹிதீன் ஜும்மா பள்ளிவாசலுக்கு நேற்று சனிக்கிழமை (26) இரவு 8.45 மணியளவில் வருகைதந்தனர்.

வடமாகாண சபை உறுப்பினர் ஐயூப் அஸ்மின், பெரியமுஹிதீன் ஜும்மா மஸ்ஜித் நிர்வாகிகள் மற்றும் யாழ் கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளன நிர்வாகசபை உறுப்பினர்கள், மஹல்லாவாசிகள் வரவேற்றனர்.

வடமாகாண சபை உறுப்பினர் ஐ அஸ்மின்  கூட்டத்தை தொடங்கிவைக்க முன்நாள் யாழ் மாநகரசபை உறுப்பினர் B.S.M சாரபுள் அனாம் தலைமை உரையை நிகழ்த்தினார். அதனைத்தொடர்ந்து யாழ் கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் RK சுவர்கஹான் உரைநிகழ்த்தினார்.

JKMF தலைவர் AH ஜமால் முஹிதீன் சம்மேளனம் சார்பாக மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வின்போது JKMF உபசெயலாளரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான ML லாபிர், முன்நாள் யாழ்/கிளி ஜம்மியதுள் உலமாசபை தலைவர் A.M.A அஸீஸ் மௌலவி மற்றும் சமூக நலன்விருபிகள் அனைவரும் கலந்துகொண்டனர். A.M.A அஸீஸ் மௌலவி அவர்களின் துஆ பிரார்த்தனையோடு கூட்டம் நிறைவுபெற்றது.

No comments

Powered by Blogger.