Header Ads



லக்ஸ்மன் கிரியல்ல பதவிவிலக, வேண்டுமென கோரிக்கை

உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல பதவி விலக வேண்டுமென பல்கலைக்கழக பேராசிரியர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் பேராசிரியர் நிர்மால் ரஞ்சித் தெவ்சிறி தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக பேராசிரியர் நியமனம் விவகாரங்களில் தலையீடு செய்வதற்கு உயர்கல்வி அமைச்சருக்கு எவ்வித அதிகாரமும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

களனி பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞான பீடத்திற்கு தற்காலிக அடிப்படையில் விரிவுரையாளர் ஒருவரை நியமிக்குமாறு பல்கலைக்கழக வேந்தருக்கு அமைச்சர் சிபாரிசு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

உயர்கல்வி அமைச்சர் தனது அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்துள்ளதாகவும் நல்லாட்சி கொள்கைகளுக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

எனவே, உயர்கல்வி அமைச்சராக பதவியில் நீடிக்கும் தகுதி லக்ஸ்மன் கிரியல்லவிற்கு கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கல்விசாரா ஊழியர்கள் சில நேரங்களில் சட்டவிரோதமான அடிப்படையில் நியமிக்கப்பட்ட சந்தர்ப்பம் பற்றி கேள்வி பட்ட போதிலும், முதல் தடiவாயக விரிவுரையாளர் ஒருவரை நியமிக்குமாறு சிபாரிசு செய்யப்பட்ட முதல் சந்தர்ப்பம் என பேராசிரியர் நிர்மால் ரஞ்சித் தெவ்சிறி தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.