"மைத்திரிபால சிறிசேன, சுதந்திரக் கட்சிக்காரர் கிடையாது"
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் உண்மையான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் அல்ல என களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி அயகம பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில்....
அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொண்டு இன்று சுதந்திரக் கட்சியைப் பாதுகாப்பதாக கூறும் பலரும் உண்மையான சுதந்திரக் கட்சிக்காரர்கள் அல்ல. இவர்கள் கட்சி தாவியவர்களேயாவர்.
உண்மையச் சொன்னால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் உண்மையான சுதந்திரக் கட்சிக்காரர் கிடையாது. கட்சியை உடைத்துக் கொண்டு சென்றே அவர் ஜனாதிபதியாகினார். எனவே மைத்திரிபால சிறிசேனவினால் எம்மை கட்சியை விட்டு நீக்க முடியாது.
நான் 38 ஆண்டுகளாக சுதந்திரக் கட்சியில் அங்கம் வகிக்கின்றேன். நான் கட்சியை விட்டு செல்லவில்லை, செல்லப் போவதுமில்லை. இதனால் கட்சி பற்றி அச்சமின்றி எனக்கு பேச முடியும்.
கூட்டு எதிர்க்கட்சி உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வெற்றியீட்டம் என்ற அச்சம் காரணமாகவே இந்த அரசாங்கம் தேர்தலை ஒத்தி வைத்து வருகின்றது.
மஹிந்த ராஜபக்ச தலைமையில் புதிய அரசாங்கமொன்றை அமைப்பதே கூட்டு எதிர்க்கட்சியின் நோக்கமாக அமைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment