யாழ்ப்பாணம் மஸ்ஜித் அபூபக்கர் பள்ளிவாசல், கதவுகளை அமைக்க உதவும்படி வேண்டுகோள்
-Jan Mohamed-
மஸ்ஜித் அபூபக்கர் யாழ்ப்பாணம் புதிய சோனக்ரிஸ்தான் பகுதியில் அராலி வீதியில் அமைந்துள்ள பள்ளிவாசலாகும். மிகவும் வறிய குடும்பங்கள் வாழ்ந்த இந்தப் பகுதியில் 1972 ஆம் ஆண்டு பள்ளிவாசல் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் தொழுகையாளிகள் குறைவாக இருந்த இப்பள்ளி 1976 ஆம் ஆண்டுக்கு பின்னர் படிப்படியாக அதிகரிப்பைக் கண்டது. இன்று இப்பிரதேசத்தை பூர்வீகமாக கொண்ட பத்துக்கும் மேற்பட்ட உலமாக்கள் உருவாகியிருக்கின்றர்கள். ஒரு குடும்பத்திலேயே மூன்று பெண்பிள்ளைகளும் ஒரு ஆண் மகனும் உலமாவாக மாறியிருக்கின்றார்கள் என்றால் இந்த பிரதேசத்தின் பழைய நிலைமையை அறிந்த யாரும் அல்லாஹ்வுக்கு ஒரு ஸுபுஹானல்லாஹ் சொல்லாமல் இருக்க மாட்டார்கள்.
தற்போது கூட இப்பள்ளிவாசலில் தான் அதிகமான ஊர் மஹல்லாவாசிகள் காணப்படுகின்றார்கள். இஷா தொழுகைக்கு ஐம்பதுக்கும் அதிகமானவர்கள் வருகின்றார்கள். இங்கு ஜும்மாவுக்கும் இரு நூறுக்கும் மேற்பட்டவர்கள் வெருகின்றார்கள் என்றால் அது இந்தப் பள்ளியை ஆரம்பத்தில் உருவாக்கியவர்கள் அதன் பிறகு இப்பள்ளியில் தொழுகையாளிகளை உருவாக்க பாடுபட்டவர்கள் மற்றும் மீண்டும் இப்பள்ளியை மீளமைக்க முயற்சி செய்து பாதி கட்டிடத்தை பூர்த்தி செய்த சகோதரர் அஸ்மின் ஐயூப், நிபாகிர் ஆகியோரையும் அதன் பின்னர் பள்ளியை முழுமையாக கட்ட பாடு படும் அபுல் கலாம் , ரியாஸ், ரிஸ்வான், கியாஸ், பைஸர், சுனாஸ், நியாஸ் , யூஸுப், நயீம் , அஸ்லம். ஆரிப், ஆகியோருக்கும் நிதியுதவி ஆலொசனைகள் வழங்கிய சகலருக்கும் இப்பள்ளியை உருவாக்கிய நன்மைகள் சேரும்.
இருந்தாலும் இப்பள்ளியின் முன்பக்கத்தில் இரண்டு பெரிய கதவுகள் அமைக்கும் பணி வேலைகள் இன்னும் பூர்த்தியாகவில்லை. அத்துடன் முன்மதில் கட்டும் பணி ஓரளவுக்கு முடிந்துள்ளது. ஆனால் அதற்கு இரண்டு கேட்கள் போடும் வேலை இன்னும் பாக்கியுள்ளது.
எனவே வெளிநாடுகளில் வாழும் முஸ்லிம்கள் இப்பள்ளியை முழுமைப்படுத்தி நன்மைகளை பெற்றுக் கொள்ள ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. 4 அல்லது ஐந்து இலட்சம் பெறுமதியான பணிகளே மிச்சம் உள்ளன. சிறு துளி பெரு வெள்ளம். நீங்கள் ஒரு ஐந்தாயிரம் ரூபாய் வழங்கினாலும் நூறு பேர் சேர்ந்தால் அந்தத் தொகை வந்துவிடும். எனவே கடந்த 6 வருடங்களாக இழுபட்டுக் கொண்டிருக்கும் இந்த அல்லாஹ்வின் மாளிகையை பூர்த்திசெய்யும் பாக்கியத்தை பெற்று சுவனத்தில் ஒரு மாளிகையை பெற்றுக் கொள்ளுங்கள்.
தொடர்பு : ரிஸ்வான் 00094772727500 அபுல் கலாம் 0772955726 ஆகியொருடன் தொடர்ப்கொண்டு உதவிகளைச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
Post a Comment