Header Ads

புதைக்கப்பட்ட சிறுமியின் சடலத்தைக் காணவில்லை - விசாரணை ஆரம்பம்

வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்த ஆறு வயது சிறுமியொருரின் இறுதிக்கிரியைகள், கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற நிலையில், நேற்றிரவு எவருக்கும் தெரியாமல் இனந்தெரியாதோர் சிலரால் அச்சிறுமியின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

மதவாச்சி, வஹமல்கொல்லாவ பொது மயானத்திலேயே மேற்படி சிறுமியின் சடலம் புதைக்கப்பட்டிருந்தது. குறித்த மயானத்துக்கு, நேற்றிரவு சென்றுள்ள சிலரே, சடலத்தை தோண்டி எடுத்துச் சென்றுள்ளனர் என்று பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

சடலம் இருந்த இடத்தைத் தோண்டி, சவப்பெட்டியை வெளியில் எடுத்துள்ள இனந்தெரியாத நபர்கள், சடலத்தை மாத்திரம் எடுத்துவிட்டு சவப்பெட்டியை அங்கேயே போட்டுவிட்டுச் சென்றுள்ளனர்.

இன்று -30- காலை மயானத்துக்குச் சென்றுள்ள சிறுமியின் உறவினர் ஒருவர், சடலம் புதைக்கப்பட்ட இடம் தோண்டப்பட்டுள்ளதை அவதானித்து, அது தொடர்பில் பொலிஸாருக்கு கூறியதை அடுத்தே அவ்விடத்துக்குச் சென்ற பொலிஸார், விசாரணைகளை ஆரம்பித்துள்ளார். 

கடந்த சனிக்கிழமையன்று முச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்த குறித்த சிறுமி விபத்துக்கு உள்ளாகி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்த ஆறு வயது சிறுமியொருரின் இறுதிக்கிரியைகள், கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற நிலையில், நேற்றிரவு எவருக்கும் தெரியாமல் இனந்தெரியாதோர் சிலரால் அச்சிறுமியின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.
மதவாச்சி, வஹமல்கொல்லாவ பொது மயானத்திலேயே மேற்படி சிறுமியின் சடலம் புதைக்கப்பட்டிருந்தது. குறித்த மயானத்துக்கு, நேற்றிரவு சென்றுள்ள சிலரே, சடலத்தை தோண்டி எடுத்துச் சென்றுள்ளனர் என்று பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
சடலம் இருந்த இடத்தைத் தோண்டி, சவப்பெட்டியை வெளியில் எடுத்துள்ள இனந்தெரியாத நபர்கள், சடலத்தை மாத்திரம் எடுத்துவிட்டு சவப்பெட்டியை அங்கேயே போட்டுவிட்டுச் சென்றுள்ளனர்.
இன்று காலை மயானத்துக்குச் சென்றுள்ள சிறுமியின் உறவினர் ஒருவர், சடலம் புதைக்கப்பட்ட இடம் தோண்டப்பட்டுள்ளதை அவதானித்து, அது தொடர்பில் பொலிஸாருக்கு கூறியதை அடுத்தே அவ்விடத்துக்குச் சென்ற பொலிஸார், விசாரணைகளை ஆரம்பித்துள்ளார். 
கடந்த சனிக்கிழமையன்று முச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்த குறித்த சிறுமி விபத்துக்கு உள்ளாகி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
- See more at: http://www.tamilmirror.lk/169157/%E0%AE%AA-%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%95%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%9A-%E0%AE%B1-%E0%AE%AE-%E0%AE%AF-%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%A3%E0%AE%B5-%E0%AE%B2-%E0%AE%B2-#sthash.4GowQMsf.dpuf

No comments

Powered by Blogger.