Header Ads



"பேஸ்புக்கில் குழந்தைகளின், புகைப்படங்களை பதிவேற்றாதீர்கள்"

குழந்தைகளின் புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்வதை தவிர்க்க வேண்டும் என பெற்றோர்களுக்கு பிரான்ஸ் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சமூகவலைதளங்களில் முன்னணி தளமாக இருக்கும் பேஸ்புக்கில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்களது புகைப்படங்களை பதிவேற்றம் செய்து அதனை நண்பர்களோடு சேர்ந்து கிண்டல் செய்வதை வழக்கமாக கொண்டிருப்பர்.

ஆனால், இதனால் பல்வேறு விளைவுகள் ஏற்படும் என தெரிந்திருந்தும் சமூகவலைதளம் மோகம் மக்களை ஆட்டிப்படைக்கிறது.

இந்நிலையில் பிரான்ஸ் பொலிசார் பெற்றோர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கையில், உங்கள் குழந்தைகள் மிகவும் அழகாக இருக்கிறது என்பதால் அதனை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வதற்காக விதவிதமான புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யலாம்.

அதில் தவறில்லை, ஆனால் அன்றாடம் பதிவேற்றம் செய்வதை நிறுத்திவிடுங்கள், இதுகுறித்து பிரான்ஸ் காவல்துறையின் தலைமை அதிகாரி கூறுகையில், பேஸ்புக்கினை பார்வையிடுகையில், அதில் புதிதாக பிறந்த குழந்தைகளின் புகைப்படங்கள் மற்றும் முதல் முதலாக பாடசாலைக்கு செல்லும் குழந்தைகளின் புகைப்படங்கள் அதிகமாக தரவேற்றம் செய்திருப்பதை பார்த்தேன்.

இதனை பார்க்கையில் குழந்தைகளின் பாதுகாப்பினை பற்றிதான் சிந்திக்க தூண்டுகிறது, யாருடைய புகைப்படங்கள் மற்றும் பெயர்கள் அதிகமான இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறதோ, அவர்கள் தங்களது தனியுரிமையை இழக்கிறார்கள்.

உங்கள் குழந்தைகள் அழகாக இருப்பதால் நீங்கள் பெருமிதம் அடையலாம், அதனால் குழந்தைகளின் 3 புகைப்படங்களை நீங்கள் தரவேற்றம் செய்தால், உங்கள் நண்பர்களில் 10 பேரும் இதனை திருப்பி செய்வர்.

மேலும், இதன் வாயிலாக உங்கள் குழந்தைகளின் பெயர், முகவரி, படிக்கும் பாடசாலை என அனைத்தையும் தெரிந்துகொள்ளும் குற்றசெயல்களில் ஈடுபடும் கும்பல், நாளடைவில் அவர்களை கடத்தவும் வாய்ப்புள்ளது.

எனவே, உங்கள் குழந்தைகளின் பாதுகாப்பு விடயத்தில் எச்சரிக்கையாக இருங்கள், புகைப்படங்களை பதிவேற்றம் செய்வதை நிறுத்துங்கள் என்று தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.