துருக்கியில் மீண்டும் குண்டுவெடிப்பு - அஞ்சமாட்டேன் என்கிறார் எர்துகான்
துருக்கியில் உள்ள இஸ்தான்பூல் நகரின் மத்தியில் சற்று முன்னர் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில் 4 பேர் பலியாகியுள்ளதாகவும் 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
துருக்கியின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான இஸ்தான்பூலில் சற்று முன்னர் தற்கொலை படை தாக்குதல் நடந்துள்ளது.
நகரின் மத்தியில் உள்ள Istiklal என்ற வீதியில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. இதில் 4 பேர் பலியானதுடன், 20 பேர் காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை துருக்கியின் தலைநகரான அங்காராவில் குர்து இன போராளிகள் (TAK) நடத்திய தாக்குதலில் 37 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில் தற்போது இரண்டாவது முறையாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் குறித்து துருக்கி அதிபரான Recep Tayyip Erdogan அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ‘துருக்கி பாதுகாப்பு படை வீரர்களை எதிர்த்து போரிட முடியாததால், அப்பாவி பொதுமக்கள் மீது கிளர்ச்சியாளர்கள் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
இந்த தாக்குதல்கள் துருக்கி அரசாங்கத்தின் தீவிரவாத கொள்கைகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த மட்டுமே முடியும் என்றும், இந்த தாக்குதலால் அஞ்சப்போவதில்லை’ என தெரிவித்துள்ளார்.
மேலும், பட்டப்பகலில் நிகழ்ந்துள்ள இந்த தாக்குதல் குறித்து விசாரணை நடத்த உள்துறை பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
Post a Comment