Header Ads



தமிழ் - முஸ்லிம் தலைவர்களிடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் - ஞானசார

சிங்களத் தலைவர்கள் தமிழ்- முஸ்லிம் தலைவர்களிடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டுமென பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று -24-  நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

தனது இனத்தை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்து சிங்கள அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் , முஸ்லிம் தலைவர்களிடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியமானது.

வடக்கில் மீள் குடியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்போது போரினால் இடம்பெயர்ந்த அனைவரையும் குடியேற்ற வேண்டியது அமைச்சர் டி.எம். சுவாமிநாதனின் பொறுப்பாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. பக்கா லூசு...! தர்க்க ரீதியாக முரணாக உள்ளது. தமிழ் முஸ்லிம் அரசியல் தலைவர்களையும், அரசியல் வாதிகளையும் தூற்றும் இவர் இப்படி கூறுவது நகைப்புக்கிடமாக உள்ளது.

    ஆனால் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் என்று சொல்லிக்கொல்பவர்களிடம் இருந்து தயவு செய்து கற்றுக் கொண்டு விடாதீர்கள். ஏனெனில் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்ட போது, முஸ்லிம்கள் அவமானப்படுத்தப்பட்டு அச்சுறத்தப்பட்ட போது, அளுத்கம தாக்கப்பட்ட போது , 18 சட்டமூலத்தை ஆதரித்தவர்கள், கசினோ சட்ட மூலத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்காதவர்கள், அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் கையப்பமிட்டு ஜனாதிபதி ராஜபக்சவிடம் நேரம் ஒதுக்கி கேட்டும் அது கணக்கில் எடுக்கபடாமல் இருந்த போதும் அரசாங்கத்தில் அமைச்சு பதவியை கட்டிப்பித்துக் கொண்டு, அந்த ஜனாதிபதியை காணும் நேரமெல்லாம் பள்ளித்துக் கொண்டிருந்தவர்கள் அல்லவா இந்த முஸ்லிம் தலைவர்கள். இவை அனைத்துக்கும் தனது அமைச்சரவையில் இருந்த அனைவரும் பொறுப்பு என்று வேற ராஜபக்ச அவர்கள் கூறி உள்ளார். இப்படிப்பட்ட பக்கா சுயநல, சூடு, சுரணையற்ற முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் ( பதவிக்காக மதமும் மாறக் கூடியவர்கள் என்ற குற்றச்சாட்டும் உள்ளது) இருந்து எதனையும் கற்றுக் கொண்டுவிடாதீர்கள்.

    ReplyDelete
  2. What kuruvi says is 100./. true.Muslim leaders have no policy of their own They are all pacca opportunists,boot lickers and chameliones.

    ReplyDelete

Powered by Blogger.