Header Ads



"எந்தவொரு நாட்டிலும் இல்லாத ஒன்று" சுட்டிக்காட்டும் மைத்திரி

படித்தவர்கள் மற்றும் புத்திஜீவிகளின் பொறுப்பு நாட்டை விட்டுச் செல்வதன்றி நாட்டை கட்டியெழுப்புவதற்காக ஒன்றுபடுவதே என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

தனிப்பட்ட நன்மைகள் போன்றே நாட்டின் தேசிய நலன்களையும் கருத்திற்கொண்டு செயற்படுவது அனைவரினதும் பொறுப்பாகும் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

கொழும்பு தும்முல்ல ஸ்ரீ சம்புத்த ஜயந்தி மாளிகையில் இன்று நடைபெற்ற அரச சேவை பொறியியலாளர்கள் சங்கத்தின் 39வது வருடாந்த மாநாட்டில் கலந்து கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை கூறியுள்ளார்.

இலவசக் கல்வியைப் பெற்றுக்கொண்டு சுதந்திரமாக நாட்டை விட்டு செல்வதற்கு படித்த இலங்கையர்களுக்கு சந்தர்ப்பம் இருப்பதாக கூறிய ஜனாதிபதி உலகில் அபிவிருத்தியை நோக்கி பயணித்த எந்தவொரு நாட்டிலும் அவ்வாறில்லை என்று கூறினார்.

சம்பளப் பிரச்சினைகள் பொறியியல் துறையினருக்கு மாத்திரமல்லாமல் அனைத்து துறைகளிலும் காணப்படுவதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

1 comment:

Powered by Blogger.