Header Ads



இலங்கையின் போதைபொருள் கடத்தல் மன்னன், வசந்த மெண்டிஸ் தாய்லாந்தில் கைது


தாய்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல போதைப் பொருள் கடத்தல்காரான வசந்த மெண்டிஸ் என்பவர் இன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சந்தேக நபரை தமது பொறுப்பில் எடுத்து கொண்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

தெற்கில் இயங்கி வரும் ஹெரோயின் போதைப் பொருள் கடத்தலில் முக்கிய சூத்திரதாரி வசந்த மெண்டிஸ் எனக் கூறப்படுகிறது.

இரண்டு வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து இது பற்றிய தகவல்கள் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

2013 ஆம் ஆண்டு 30 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் லைப்பீரிய பிரஜையை கைது செய்யப்பட்ட பின்னர், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

மேலும் சில சந்தர்ப்பங்களின் போது, போதைப் பொருள் கடத்தலுடன் சம்பந்தப்பட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

10 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட ஒஸ்டின் என்பவரும் இதில் அடங்குகிறார். ஒஸ்டின் என்பவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளை அடுத்த வசந்த மெண்டிஸ் பற்றிய தகவல் தெரியவந்துள்ளது.

வசந்த மெண்டிஸ்சை கைது செய்ய நீர்கொழும்பு நீதவான் நீதிமன்ற பகிரங்க பிடியாணை பிறப்பித்திருந்ததுடன் சிகப்பு அறிக்கையையும் வெளியிட்டிருந்தது.

வசந்த மெண்டிஸ்சை நீதிமன்ற தடுப்பு காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைத்து விசாரிக்கவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.