Header Ads



இஸ்லாமிய அடிப்படைவாதம் கட்டியெழுப்படுவதற்கான வழிகளை மூட வேண்டும் - ஜனாதிபதியிடம் கோரிக்கை


ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை இலங்கையிலும் தடைசெய்யப்பட்ட அமைப்பாக அறிவிக்குமாறு ஜாதிக ஹெல உறுமய கட்சியின் துணை அமைப்பான ஹெல பொது சவிய அமைப்பு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த அமைப்பில் மாலைதீவு மற்றும் பாகிஸ்தான் நாடுகளை சேர்ந்த பலர்  இணைந்து கொண்டுள்ளதாகவும் ஹெல பொது சவிய அமைப்பு ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளது.

இஸ்லாமிய அடிப்படைவாதத்துடன் கட்டியெழுப்பட்டுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு உலகில் பெரும் அழிவுகளை ஏற்படுத்தி வருகிறது.

இலங்கையில் இஸ்லாமிய அடிப்படைவாதம் கட்டியெழுப்படுவதற்கான அடிப்படையாக இருக்கும் வழிகளை மூட வேண்டும்.

மாலைதீவு மற்றும் பாகிஸ்தான் பிரஜைகள் அதிகளவில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் இணைந்து கொண்டுள்ளதாக உலக செய்திகள் சுட்டிக்காட்டுகின்றன. இந்த நாடுகளை சேர்ந்த பலர் இலங்கையில் வசித்து வருகின்றனர்.

இதனால், ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளை தேடிக்கண்டு பிடிக்க தேவையான சட்ட வரைவு ஒன்றை ஏற்படுத்த வேண்டும் எனவும் இதற்கு அமைவாக இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை ஒன்றையும்  முன்வைப்பதாக ஹெல பொது சவிய அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

3 comments:

  1. Muslim country and groups are first people saying to destroy this western build terrorism , but this points shouldn't come from terrorist like you and PBS , government should destroy you and pbs as you are the most dangers racist , try to attack minority and kill enocent people by your poisoning idea . We kindly ask government to destroy this kind of groups.

    ReplyDelete

Powered by Blogger.