"விசர் பிடித்தவராக, இருக்க வேண்டும்"
ஒழுக்காற்று நடவடிக்கை பற்றி பேசுபவர் விசர் பிடித்தவராக இருக்க வேண்டுமென முன்னாள் அமைச்சர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார்.
கடந்த 17ம் திகதி ஹைட் மைதானத்தில் நடைபெற்ற கூட்டம் அண்மைய நாட்களில் அதிக மக்களுடன் நடத்தப்பட்ட மிகப் பெரிய கூட்டம் என அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது என்பது நிரூபணமாகியுள்ள நிலையில், அவ்வாறு கூட்டத்தில் பங்கேற்றவர்களை கட்சியை விட்டு நீக்குவதாக எச்சரிக்கை விடுக்கும் அதிகாரிகள் ஒன்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகம் சிறிகொத்தவிலோ அல்லது அங்கொடை மனநோயாளர் பிரிவிலோ சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டியவர்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த கூட்டமானது கட்சியை பிளவுபடுத்தும் கூட்டமன்று எனவும், ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான கூட்டம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தக் கூட்டத்தில் 43 பாராளுமன்ற உறுப்பினர்கள், 284 மாகாணசபை உறுப்பினர்களும், 1484 உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தனர் எனவும் அவர்கள் அனைவருக்கு எதிராகவும் ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
கட்சியின் சிரேஸ் உப தலைவர்கள் ஐந்து பேரில் மூன்று பேர் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Post a Comment