பெண்களின் ஆதரவு யார் பக்கம் - இன்று கொழும்பில் மைத்திரி - மகிந்த மோதல்
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் மகளிர் பிரதிநிதிகளை கொழும்பிற்கு அழைக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று -08- வெவ்வேறாக நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மகளிர் அமைப்பை வலுப்படுத்தும் வகையில்,
நாடு பூராகவுமுள்ள சுமார் 500 பேர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு இன்று அழைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, தற்போதைய அரசாங்கத்தினால் பெண்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக தெரிவித்து தேங்காய் உடைக்கும் நிகழ்வொன்றும் இடம்பெறவுள்ளது.
அத்துடன், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மைத்திரி தரப்பை விடவும் கூட்டு எதிர்க்கட்சியினர் வலுவாகவுள்ளனர் என்பதை காண்பிக்கும் வகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு நெருக்கமான உள்ளூராட்சி மன்றங்களிலுள்ள 15000 பெண்களை கொழும்பிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ள மகளிர் தின நிகழ்வுகளுக்காக அழைப்பு தொலைபேசியூடாக விடுக்கப்பட்டுள்ளது.
எனினும், கூட்டு எதிர்க்கட்சியினர் கிராமங்களுக்கு கிராம் சென்று பெண்களை நேரடியாக அழைத்துள்ளனர்.
கூட்டு எதிர்க்கட்சி தமது மகளிர் பிரதிநிதிகளை அழைத்து வர விசேட பஸ்களை ஈடுபடுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் நடைபெறுகின்ற நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
இதேவேளை, கொழும்பு நவகமுவ ஆலயத்தில் நடைபெறவுள்ள விசேட பூஜை வழிபாடுகள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment