அபயராமை விகாரையில், மகிந்தவின் சூழ்ச்சியில் சிக்கிய மைத்திரி
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நெருக்கடிக்குள் சிக்க வைக்க மஹிந்த தரப்பினால் மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சி நடவடிக்கை ஒன்று அம்பலமாகியுள்ளது.
அண்மையில் கொழும்பு நாரஹென்பிட்டி அபயராமை விகாரையில் இடம்பெற்ற அறநெறி நிகழ்வொன்றிக்காக ஜனாதிபதி அழைக்கப்பட்டிருந்தார்.
விகாரையின் விஹாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரரினால் ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதன் பின்னணியில் பாரிய சூழ்ச்சி வலை பின்னப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அபயராமை விகாரையின் உரிமை தொடர்பில் தற்போது வரையில் நீதிமன்றில் வழக்கு இடம்பெற்று வருகின்றது. பத்பேரியே ஸ்ரீ விமலஞான தேரருக்கே இந்த விகாரையின் உண்மையான உரிமை உள்ளது.
அண்மையில் இந்த விகாரை அரசியல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படுகின்றமை தொடர்பில் குற்றம் சுமத்தியதோடு அதனை தடுப்பதற்காக அவர் நீதிமன்றின் தடை உத்தரவு ஒன்றினையும் பெற்றிருந்தார்.
மஹிந்த ராஜபக்ச மற்றும் கூட்டு எதிர்க்கட்சி குழுவினர் இந்த விகாரையை அரசியல் செயற்பாட்டுக்காக பயன்படுத்தியமையே இதற்கு காரணமாகும்.
குறித்த அறநெறி நிகழ்வில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டமையை முருத்தெட்டுவே ஆனந்த தேரர் புகழ்ந்து பேசியிருந்தார். நாட்டின் தலைவர் ஒருவர் தனது கடிதம் மூலமான அழைப்பின் பேரில் வருகை தந்த முதல் சந்தர்ப்பம் இதுவென அவர் குறிப்பிட்டிருந்தார்.
எனினும் ஜனாதிபதியை இந்த நிகழ்வில் கலந்துகொள்ள வைப்பது மஹிந்த ராஜபக்சவின் திட்டத்திற்கமைய மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதி மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவை அபயராமைக்கு எப்படியாவது அழைத்து வர வேண்டும் எனவும், அதன் ஊடாக அபயராமை என்பது அரசியல் நடவடிக்கைகளுக்கு மாத்திரம் இடமளிக்கும் விகாரை அல்ல என காட்டுவதே இதன் பிரதான நோக்கமாகும். அத்துடன் ஜனாதிபதியின் மனதில் இடம்பிடித்து, முருத்தெட்டுவே ஆனந்த தேரருக்கு எதிராக உள்ள குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கு இதனை வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்வது மஹிந்த தரப்பின் எண்ணமாக இருந்துள்ளது.
தற்போது வரையில் விகாரையின் உரிமை தொடர்பில் மேற்கொள்ளப்படுகின்ற நீதிமன்ற செயற்பாட்டை தீர்த்துக் கொள்ளவதற்காக பத்பேரியே ஸ்ரீ விமலஞான தேரர் தரப்பினரால் பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
எனினும் இந்த நிகழ்வு அறநெறி நிகழ்வென்பதனை மறைத்து அரசியல் நிகழ்வென ஊடக பிரச்சாரம் மேற்கொள்வதற்கு ராஜபக்ச தரப்பினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உண்மைகள் தெரிந்திருந்தாலும் மைத்திரி போய்த்தான் இருந்திருப்பார். காரணம்... அவருக்கு நல்லாட்சி எனும் மாயைக்கான வாக்குறுதிகளை காப்பாற்றுவதைவிட இனவாத, மதவாத காவிகளை திருப்திப்படுத்துவதே முக்கியமானது!
ReplyDelete