ஜனாதிபதி மைத்திரிபால, பெயரளவிலேயே பௌத்தராக உள்ளார் - ஞானசாரர்
ஏனைய மதங்களை போன்று பௌத்த மதத்துக்கு தலைமை தாங்க, வலிமை கொண்ட தலைவர் ஒருவர் இல்லையென பொதுபல சேனாவின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
பௌத்த மதத்துக்கு இரண்டு நிக்காயாக்கள் உள்ளன. எனினும் ஏனைய மதங்கள், தன்னத்தை ஒரு தலைவரை கொண்டிருக்கின்றன.
இந்தநிலையில் பௌத்த சாசனத்தை பாதுகாத்து அனைத்து பௌத்தர்களுக்கும் ஒரு தலைவர் தேவை என்றும் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.
வழக்கு விசாரணைக்காக நேற்று நீதிமன்றத்துக்கு சென்றிருந்தபோதே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
இலங்கையின் ஜனாதிபதி பௌத்தர் என்றபோதிலும் அவர் பெயரவிலேயே பௌத்தராக உள்ளார்.
இன்று பௌத்தர்கள் கிறிஸ்தவ தீவிரவாதத்தினால் சூழப்பட்டுள்ளதாகவும் தேரர் குறிப்பிட்டுள்ளார்
முஸ்லிம்கள் ஒரேஒரு இறைவனையும் முகம்மது (ஸல்) அவர்களை வழிகாட்டி தலைவராகவும் பின்பற்றி இருக்கிறார்கள் அதனால் எந்தப்பிரச்சினையும் வர வாய்ப்பே இல்லை.எங்களுக்கு ஆயிரத்தி எட்டு தலைவர் தேவை இல்லை.
ReplyDeleteதிருடன் ஒரு போலீஸ்காரரைப் பாராட்டினால்தான் அவரைச் சந்தேகப்பட வேண்டும். மாறாக தூற்றினால் அந்த போலீஸ்காரர் ஏதோ ஒருவிதத்தில் கடமையைச் சரியாக செய்கிறார் என்றுதானே அர்த்தம்..?
ReplyDeleteஅப்படிப் பார்த்தால் ஞானசாரர் கூற்றுப்படி ஜனாதிபதி மைத்திரி அவர்கள் ஒரு சிறந்த பவுத்தர் என்பதில் சந்தேகமே கிடையாது.