"நாங்கள் பள்ளிவாசல்களை நிர்மாணித்தோம், ஆனால் விகாரைகள் குறித்தே விசாரணை நடத்தப்பட்டது"
நாட்டின் தற்போதைய அரசாங்கம் பௌத்த சமயம் தொடர்பில் கொண்டுள்ள நிலைப்பாடுகள் மிகவும் கவலைக்குரியது என முன்னாள் ஜனாதிபதியான நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மாத்தறை கும்புறுப்பிட்டியவில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, அவர் மேலும் தெரிவிக்கையில்,
பௌத்த பிக்குகள் 48 பேர் சிறைகளில் உள்ளனர். உடுவே தம்மாலோக்க தேரர் கைது செய்யப்பட்ட விதம் மற்றும் பிணை வழங்கப்பட்ட விதம் குறித்து நோக்கும் போது நாம் எங்கு செல்கிறோம் என்று எண்ண தோன்றுகின்றது என தெரிவித்துள்ளர்.
கிராமத்தில் இருக்கும் நாய்க்குட்டிகள், பூனைக்குட்டிகள் என அனைத்தையும் விகாரைகளுக்கு தான் கொண்டு வந்து விடுவார்கள் என்பதை நாம் அறிவோம். விகாரை ஒன்றை நிர்மாணிக்க அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது.
விகாரைகளை மட்டுமல்ல, நாங்கள் தேவாலயங்களையும், கோயில்களையும் முஸ்லிம் பள்ளிவாசல்களையும் நிர்மாணித்தோம். ஆனால், விகாரைகள் நிர்மாணிக்கப்பட்டது குறித்து மாத்திரமே விசாரணை நடத்தப்பட்டது.
இந்த மாற்றம் தொடர்பில் நாம் மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்பது தான் எனது நம்பிக்கை என தெரிவித்துள்ளார்.

Good men
ReplyDeleteHe is stimulating for another ethnic conflict. It is danger
ReplyDeleteStill you are in the racism
ReplyDeleteஉங்கள் ஆட்சியில் நடதடு பற்றி எமக்கு நன்கு தெரியும்.
ReplyDeleteஅலுத்கம கலவரத்தில் ஒரு பள்ளிவாசல்கள் மாத்திரம் தான் தாக்கப்பட்டது. ஒரு விகாரையும் தாக்கப்பட வில்லை.