இத்தாலியில் இலங்கையர்கள் மேற்கொண்டுள்ள, வேலைநிறுத்த போராட்டம்
இத்தாலி வெரோனா நகரத்தில் உள்ள இலங்கைப் பணியாளர்கள் இன்று 02-03-2016 வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இத்தாலி வெரோனா நகரத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய விற்பனை நிலையத்தில் தொழில்புரியும் இலங்கைப் பணியாளர்களே இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் குறித்த விற்பனை நிலைய நிர்வாகத்தினர் தன்னிச்சையான முடிவுகளை எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இவ்வாறு வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளதுடன்,உண்ணாவிரதத்தினையும் ஆரம்பித்துள்ளதாக இத்தாலி ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
நீண்டகாலமாக இங்கு தொழில் புரியும் பணியாளர்களின் சம்பளப் பிரச்சனை தொடர்பில் நிர்வாகத்திற்கு அறிவித்தும் இந்த விடயம் தொடர்பில் தமக்கு தீர்வு கிடைக்கவில்லை எனவும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள இலங்கைப் பணியாளர்களுள் ஒருவரான சன்ன பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அத்துடன் தமது வேலைநிறுத்தப் போராட்டத்தினால் குறிப்பிட்ட நிறுவனத்திற்கு பெரும் நஸ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், தமக்கான தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment