"பணத்திற்கும், மகிழ்ச்சிக்கும் தொடர்பில்லை" - ஆய்வில் முடிவு
வருமானம் அதிகரித்தால் தங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக மாறும் என்று பெரும்பாலான மக்கள் நம்புகிறார்கள். ஆனால் பணத்திற்கும் மகிழ்ச்சிக்கும் தொடர்பு இல்லை என்கிறது புதிய ஆய்வு முடிவு.
இங்கிலாந்தில் உள்ள ஸ்டிர்லிங் பல்கலைக்கழகம் கடந்த ஒன்பது வருடங்களாக இங்கிலாந்து மற்றும் ஜெர்மனியை சேர்ந்த 18,000 மக்களிடம் மேற்கொண்ட ஆய்வில் மேற்குறிப்பிட்ட முடிவு கிடைத்துள்ளது.
ஆய்வாளர்கள் 9 ஆண்டுகளாக 18,000 பேரின் வருமானத்தில் ஏற்பட்ட மாற்றம் மற்றும் அவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சி, மனநிறைவு பற்றி தரவுகளை திரட்டி ஆய்வு செய்தார்கள்.
மனிதர்களின் வருமானம் அதிகரிக்கும் போது அவர்களின் மகிழ்ச்சியையோ அல்லது மனநிறைவையோ அனுபவிப்பது இல்லை. மாறாக வருமானம் குறையும் போது மன அழுத்தமும், மகிழ்ச்சியின்மையும் ஏற்படுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பொருளாதார இழப்பு பயத்தில் இருந்து மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதன் மூலம் மகிழ்ச்சியை அதிகரிக்க முடியும் என்று ஆய்வு கூறுகிறது.
இதைத்தான் இன்றைக்கு 1437 வருடத்துக்கு முன் அல்லாஹ் அல் குர் ஆனில் கூறியுள்ளான் உங்களுடைய மக்களும் சொத்துகளும் உங்களின் சோதனைப்பொருட்கள். அதனால் பெரும்பாலும் பொருளாதாரத்தால் மகிழ்ச்சியடைவது மிகக்குறைவு.
ReplyDeleteAhhhh.....!
ReplyDelete