பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை, எனினும் சவால்களை சமாளிக்க முப்படையினரும் தயார்
பெல்ஜியத்தில் அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல்களை அடுத்து, சிறிலங்காவின் தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்துள்ளார்.
பெல்ஜியத்தின் தலைநகர் பிரசெல்சில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களை அடுத்து, சிறிலங்காவிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவல் வெளியிட்ட சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர,

சிறிலங்காவின் தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்ற போதிலும், எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய எத்தகைய சவால்களையும் சமாளிக்கக் கூடிய வகையில், முப்படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டார்.
அதேவேளை, கட்டுநாயக்க விமான நிலையத்தில், கூடுதல் விமானப்படையினர் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்கா விமானப்படை தெரிவித்துள்ளது,
அதேவேளை, கட்டுநாயக்க விமான நிலையத்தில், கூடுதல் விமானப்படையினர் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்கா விமானப்படை தெரிவித்துள்ளது,
Post a Comment