"மகிந்தவுக்கு சிறு கீறல், ஏற்பட்டாலும் அரசாங்கமே பொறுப்பு"
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு போதுமானதல்ல என முன்னாள் அமைச்சர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பு பொரல்லை என்.எம். பெரேரா மத்திய நிலையத்தில் இன்று -23- நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்சவுக்கு சிறு கீறல் ஏற்பட்டாலும் அதற்கு அரசாங்கமே பொறுப்புக் கூறவேண்டும். அவரது அரசாங்க காலத்தில் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.
பாதாள உலக குழுக்கள் தலைத்தூக்கியுள்ளன. மகிந்தவின் குண்டு நுளைக்காத கார் உடைந்து சில மாதங்கள் கடந்துள்ளன.
அத்துடன் மகிந்த ராஜபக்சவுக்கு இதுவரை உத்தியோகபூர்வ இல்லம் வழங்கப்படவில்லை எனவும் மகிந்த யாப்பா ஆபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு 150 இராணுவத்தினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment