Header Ads



சம்பிக்கவுக்கு சிக்கலா..?

அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் தொலைபேசி அழைப்புக்களை பரிசீலனை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அண்மையில் ராஜகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் இவ்வாறு தொலைபேசி அழைப்புக்கள் பரிசீலிக்கப்பட உள்ளன.

தொலைபேசி அழைப்புக்களை பரிசீலனை செய்ய அனுமதிக்குமாறு வெலிக்கடை பொலிஸார் கோரியிருந்தனர்.

இந்தக் கோரிக்கையை கொழும்பு மேலதிக நீதவான் சந்தன கலங்சூரிய ஏற்றுக் கொண்டு விசாரணை நடத்துமாறு இன்று உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 9ம் திகதி மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி அழைப்புக்கள் குறித்து அறிக்கை பெற்றுக் கொள்ளுமாறு நீதவான் ஏற்கனவே பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்த போதிலும், நீதிமன்றில் கோரிக்கை விடுத்தே பொலிஸார் அனுமதி பெற்றுக்கொண்டுள்ளனர்.

தொலைபேசி பதிவு செய்யபட்டுள்ளவரின் பெயர், விலாசம், எமி இலக்கம், விபத்து இடம்பெற்ற தினத்தில் இரவு 8.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரையில் தொலைபேசியலிருந்து மேற்கொள்ளப்பட்ட வெளிச் செல்லும் அழைப்புக்கள் மற்றும் கிடைக்கப் பெற்ற உள்வரும் அழைப்புக்கள் என்பன குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது.

இந்த தொலைபேசி அழைப்புக்கள் குறித்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு தொலைபேசி நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சம்பிக்க ரணவக்கவின் செல்லிடப் பேசி உரையாடல்கள் பற்றிய அறிக்கையையும், விபத்து இடம்பெற்ற பிரதேசத்தில் பொருத்தப்பட்டுள்ள சீ.சீ.ரீ.வி கமராக் காட்சிகளை பரிசீலனை செய்யுமாறும் கடந்த 9ம் திகதியே நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தார்.

கடந்த பெப்ரவரி மாதம் 29ம் திகதி இடம்பெற்ற வாகன விபத்தில் சந்தீப் சம்பத் மற்றும் மனுல மின்சுக ஆகிய இரண்டு இளைஞர்கள் காயமடைந்திருந்தனர்.

இந்த வழக்கு எதிர்வரும் 30ம் திகதி மீளவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

No comments

Powered by Blogger.