"பாகிஸ்தானின் ஆணு ஆயுதங்களை பாதுகாக்க, அமெரிக்கப் படைகள் ஆப்கானில் நீடிக்க வேண்டும்"
பாகிஸ்தான் குவித்து வைத்துள்ள ஆணு ஆயுதங்களை பாதுகாக்க அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானில் நீடித்து இருக்க வேண்டும் என டொனால்டு டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளரை தெரிவு செய்யும் தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இதில் முதற்கட்டமாக குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சியின் ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவு பெருகி வருகிறது.
இந்நிலையில் டொனால்ட் டிரம்ப் கூறுகையில், பாகிஸ்தான் குவித்து வைத்துள்ள ஆணு ஆயுதங்களை பாதுகாக்க அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானில் நீடித்து இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் கடந்த 13 வருடங்களாக தலிபான்களுக்கு எதிராக நடைபெற்று வரும் தாக்குதலில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் உள்நாட்டு பாதுகாப்பு பொறுப்பை மேற்கொண்டன.
கடந்த 2014ம் ஆண்டு இறுதியில் பெரும்பாலான நேட்டோ படைகள் விலக்கி கொள்ளப்பட்ட நிலையில், ஆப்கான் இராணுவத்துடன் சேர்ந்து ஆயிரக்கண்கான அமெரிக்க வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
2017ம் ஆண்டுடன் அமெரிக்க படைகள் முற்றிலுமாக வாபஸ் பெறப்படும் என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அறிவித்துள்ள நிலையில், டொனால்ட் டிரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Varukiran.singam
ReplyDeleteaanu ayuthamilla anu ayutham
ReplyDelete