மரவெள்ளி கன்றுகளை நாட்டுமாறு, நாட்டு மக்களிடம் வேண்டுகோள்
எதிர்காலத்தில் வரப்போகும் நிலைமையானது சிறந்தது அல்ல
என்பதால், மரவெள்ளி கன்றுகளை நாட்டுமாறு தான் மக்களிடம் கேட்டுக்கொள்வதாக
மக்கள் சேவை கட்சியின் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று -10- நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
வரி அறவீடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதன் மூலம் பொருளாதாரம் சரிந்துள்ளதை காணமுடிகிறது.
பிரதமர் நாட்டில் நிலவும் பிரச்சினைகளை முழுமையாக கூறுவதில்லை. பிரதமருக்கு பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் இயலுமை கிடையாது.
10 லட்சம் வேலைவாய்ப்பு, 5 லட்சம் வீடுகள், பெரு நகரம் போன்ற பாரிய இலக்குகள் பற்றி பேசும் முன்னர், குறைந்தது உணவு பாதுகாப்பையாவது ஏற்படுத்துமாறு நான் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றேன்.
நாட்டுக்கு புதிய அரசியலமைப்புச் சட்டம் தேவையில்லை. திருத்தங்கள் போதுமானது. ஜனாதிபதி பதவியின் அதிகாரங்களை கூட குறைக்க முடியாது.
தற்போது செல்லும் விதமாக சென்று ஜனாதிபதி பதவியை பிரதமருக்கு கொடுப்பார்கள் எனவும் சோமவன்ஸ அமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Manioc is not a new idea to Somawansa . JVP said it in 70s.
ReplyDeleteSomawansa has formed a new party , so , say something new !