"ஹக்கீமுடன் இதய சுத்தியுடனான பேச்சுவார்த்தைக்கு தயார்"
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கும் தமக்கும் இடையில் எழுந்துள்ள முரண்பாடுகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள தயாராக இருப்பதாக கட்சியின் செயலாளர் எம்.ரி. ஹஸன் அலியும் தவிசாளர் பஷீர் சேகுதாவூதும் 'விடிவெள்ளி'க்கு தெரிவித்தனர்.
மேற்படி முரண்பாடுகளை பேச்சுவார்த்தையொன்றின் மூலம் தீர்த்துக்கொள்ளலாம் என அமைச்சர் ஹக்கீம் தெரிவித்திருந்தமை தொடர்பில் வினவுகையிலேயே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
எம்.ரி. ஹசன் அலி
கட்சியின் தலைவருக்கும் எனக்கும் இடையில் உருவாகியுள்ள முரண்பாடுகளை பேச்சுவார்த்தை ஒன்றின் மூலம தீர்த்துக் கொள்ளலாம். அதற்கு நான் தயாராக இருக்கிறேன். ஆனால் அந்தப் பேச்சுவார்த்தை இதய சுத்தியுடனானதாக இருக்க வேண்டும்.
என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான எம்.ரி. ஹசன் அலி தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;
‘எந்தப் பிரச்சினையென்றாலும் பேச்சுவார்த்தைதான் இறுதித் தீர்வு. ஐக்கிய நாடுகள் சபையிலும் கூட பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சினைகள் தீர்க்கப்படுகின்றன என்றாலும் ஒரு பிரச்சினைக்குரிய விடயத்தைச் செய்வதற்கு முன்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி எனக்கும் தவிசாளருக்கும் வழங்காமல் இருப்பதற்கு முன்பு எம்முடன் பேச்சுவார்த்தை நடத்தி அதற்கான காரணத்தை விளக்கியிருக்க வேண்டும்.
கட்சியின் தேசிய மாநாடு பாலமுனையில் நடைபெறுவதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு நான் கட்சியின் தலைவரைச் சந்தித்து எனது அதிகாரங்கள் குறைக்கப்பட்டது தொடர்பில் வினவினேன். அப்போது அவ்வாறு குறைக்கப்பட்டது எனது நன்மைக்காகவே என்று அவர் தெரிவித்தார். எனது அதிகாரங்கள் எனது நன்மைக்காக குறைக்கப்பட்டால் எவ்வாறு அவரால் எனக்கு தேசியப்பட்டியல் நியமனம் வழங்கப்பட முடியும்? பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினையைத் தீர்த்துக்கொள்வதற்கு நான் தயாராக இருக்கிறேன். ஆனால் உறுதியளித்தபடி என்னிடமிருந்து மீளப் பெறப்பட்ட அதிகாரங்கள் மீண்டும் வழங்கப்பட வேண்டும். எனது நிலைப்பாட்டில் நான் உறுதியாகவே இருக்கிறேன் என்றார்.
பஷீர் சேகுதாவூத்
கட்சியின் தலைமைத்துவத்துக்கும் எமக்குமிடையிலுள்ள முரண்பாடுகளை பேச்சுவார்த்தைகள் மூலம் கலந்து பேசி தீர்த்துக் கொள்ள முடியும். பிரச்சினைகளுக்குரியவர்களில் நானும் ஒருவன் என்ற வகையில் அதற்கு நான் தயாராக இருக்கின்றேன் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
எந்தவோர் பிரச்சினையையும் பேச்சுவார்த்தை மூலம் சுமுகமாகத் தீர்த்துக் கொள்ள முடியும். ஏன் இராணுவ விவகாரங்கள் கூட பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்த்துக் கொள்ளப்படுகின்றன. அதனால் எமக்குள் நிலவும் பிரச்சினைகள் இலகுவாகத் தீர்த்துக்கொள்ளப்படலாம். ஆனால் கட்சித் தலைமைத்துவத்திடமிருந்தோ அல்லது உத்தியோகபூர்வமாகவோ பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. கட்சியின் அரசியல் உயர்பீட உறுப்பினர்கள் இருவர் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் சம்பந்தப்பட்ட இருவரும் என்னுடன் கலந்துரையாடவில்லை. அவர்கள் என்ன நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளார்கள் என்பது பற்றி எதுவும் தெரியாது என்றார். ARA.Fareel
உங்கட வரமும் சாபமும்!! உங்களால் முஸ்லிம் சமூகம் சீரழீது
ReplyDeleteDogs are bitting for bones....
ReplyDeleteஒப்பீட்டளவில் - SLMC இன் காலகட்டம் இதுவரையில் 3.
ReplyDelete1. கட்சியின் ஆரம்ப கட்டம் - மரணப்படுக்கையில் இருந்த கட்சியை மீட்டெடுத்த தலைவர் அஷ்ரபின் காலகட்டம்
2. தலைவரின் கையில் கட்சியின் உச்ச கட்டம்
3. நாளுக்கு நாள் கட்சியை அழித்துக் கொன்டிருக்கும் தலைவர் ஹகீமின் காலகட்டம்
தலைவர் அஷ்ரபின் திடீர் மரணம் ஹகீமுக்கு தலைமை கிடைக்க வழிகோலியது. மேடைப் பேச்சாற்றலைத் தவிர்த்து வேறு எந்தத் தகுதியும் இல்லாத ஹகீம் - அன்று முதல் இன்று வரை செய்த சாதனை ஒன்று உள்ளது - அது தலைமைத்துவத்திற்கான எந்தத் தகுதியும் இல்லாமல் சட்சியை சீரழித்தி சின்னாபின்னமாக ஆக்கியதுதான்.
மீதமிருக்கின்ற கட்சியின் எச்ச சொச்சம் - தலைவர் அஷ்ரபின் ஆளுமையினால் இன்னமும் கட்டுன்டிருக்கின்ற மக்கள் சிந்தனைதான் என்பதை ஹகீமாலும் மறுக்க முடியாது.
அன்று - கட்சி சிதறுன்டு கட்சியில் இருந்தும் ஹகீம் வௌியேற்றப்பட இருந்த சூழ்ச்சியில் இருந்து காப்பாற்றிய ஹசன் அலி இன்று ஹகீமுக்கு வேன்டப்படாதவனாகிவிட்டான்.
தலைக்கனமேறிய ஹகீமே - கட்சியை அழித்து இலங்கை முஸ்லீம் சமூகத்திற்கே துரேகம் செய்து கொன்டிருக்கும் உனது நாட்களும் விரைவில் எண்ணப்படத்தான் போகிறது - உன்னால் முஸ்லீம் சமூகத்திற்கு எந்த நன்மையும் இதுவரை கிடைக்கவில்லை என்பதுவே யதார்த்தம்.
அதனால் - இப்போது நாம் எதிர்பார்ப்பது நீ SLMC இல் இருந்தும் அகற்ப்படும் அந்த நாளைத்தான்...............
They are trying to find the solution for their conflict.but some bodies are trying to make a border among them.
ReplyDeleteHakeem is not a good leader for Muslims but most in here are against him because of " பிரதேச வாதம்" this is the sad part and the undeniable truth.
ReplyDelete