எவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும், அகதிகளுக்கு உதவுவதை நிறுத்த முடியாது - ஏஞ்சலா
ஜேர்மனி நாட்டில் குடியேற வரும் அகதிகளுக்கு எதிராக தனக்கும் தன்னுடைய கட்சிக்கும் எவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும் அவர்களுக்கு உதவுவதை நிறுத்த முடியாது என அந்நாட்டு சான்சலர் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
ஜேர்மனியில் அகதிகள் குடியேறுவது தொடர்பாக 3 மாகாணங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இந்த வாக்கெடுப்பில் ஜேர்மன் சான்சலர் ஏஞ்சலா மெர்க்கலின் கிறித்துவ ஜனநாயக கட்சி படுதோல்வியை சந்தித்தது.
அகதிகளுக்கு எதிரான AfD என்ற கட்சி Saxony-Anhalt மாகாணத்தில் 24 சதவிகித வாக்குகளையும், Baden-Wurttemberg மற்றும் Rhineland Palatinate மாகாணங்களில் 10 சதவிகித வாக்குகளையும் பெற்று அபார வெற்றியை பெற்றது.
இரண்டாம் உலகப்போரில் இருந்து கிறித்துவ ஜனநாயக கட்சியின் கோட்டையாக விளங்கிய Baden-Wurttemberg மாகாணத்தில் முதல் முறையாக அக்கட்சி வரலாற்று தோல்வியை சந்தித்துள்ளது.
இந்த தேர்தல் தோல்வி தொடர்பாக நேற்று சான்சலர் ஏஞ்சலா மெர்க்கல் பேசியபோது ‘கிறித்துவ ஜனநாயக கட்சிக்கு இது ஒரு கடினமான நாள். ஆனாலும், அகதிகளுக்கு உதவுவதற்காக ஜேர்மனியின் கதவுகளை திறந்து வைத்திருக்கும் தன்னுடைய கொள்கைகளில் எந்த மாற்றமும் இல்லை’ என உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
மேலும், அகதிகளின் பிரச்சனைகளை முழுமையாக தீர்க்காத இந்த நிலையில் AfD கட்சி வெற்றி பெற்றுள்ளது அகதிகளுக்கு எதிரான போராட்டத்தை ஏற்படுத்தும் என்றும், ஜேர்மனியில் அகதிகளை ஒருங்கிணைப்பதில் சிக்கல்கள் உருவாகும் என தான் அச்சப்படுவதாக ஏஞ்சலா மெர்க்கல் கருத்து தெரிவித்துள்ளார்.
YOU ARE DOING GREAT AND ALLAH WILL GUIDE YOU SOON IN RIGHT PATH YOU ARE BETTER THAN LABEL MUSLIM
ReplyDelete