முக்கிய ஆதாரங்களுடன் டுபாய் பறக்கிறது, இலங்கையின் நிதி மோசடி விசாரணைப் பிரிவு
முன்னாள் அரசாங்கத்தின் முக்கிய உறுப்பினர்களிற்கு எதிரான ஆதாரங்களுடன் இலங்கை அதிகாரிகள் குழுவொன்று துபாய் செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.
இலங்கையின் விசேட நிதிக்குற்றவியல் பிரிவினை சேர்ந்த அதிகாரிகள் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளுடன் இணைந்து துபாய்க்கு விரைவில் செல்லவுள்ளனர்.
இந்த விஜயத்தின்போது சட்டவிரோதமாக பெறப்பட்ட பணத்தினையே முன்னைய அரசாங்கத்தினை சேர்ந்தவர்கள் துபாய் வங்கிகளில் வைப்பிட்டுள்ளனர் என்பதற்கான ஆதாரங்களை அவர்கள் துபாய் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கவுள்ளனர்.
கடந்த வாரம் நிதிக்குற்றங்கள் தொடர்பிலான பிரிவினர் முன்னாள் ஜனாதிபதியின் மூத்த புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல்ராஜபக்ச மேற்கொண்ட சட்டவிரோத பணப்பரிமாற்றங்கள் குறித்த விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.
இந்த விசாரணைகள் நாமல்ராஜபக்சவினால் கொள்வனவு செய்யப்பட்ட கௌவர்ஸ் கோர்ப்பரேட் என்ற தனியார் நிறுவனம் தொடர்பானது. இந்த நிறுவனம் தொடர்பில் பல சட்டவிரோத பணப் பரிமாற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Post a Comment