கால்பந்தில் யார் சிறந்த வீரர் என்ற விவாதம், ஒரு உயிரை பறித்தது
கால்பந்தில் யார் சிறந்த வீரர் என்ற விவாதம் மும்பையில் ஒரு உயிரை பறித்துள்ளது.
கிரிக்கெட்டிலும் சரி, கால்பந்திலும் சரி சில வீரர்களை வைத்து நண்பர்களுக்குள் விவாதம் செய்து மோதிக் கொள்வது தொடர் கதையாக இருந்து வருகிறது.
இதேபோன்று மும்பையில் கால்பந்தில் மெஸ்ஸி சிறந்தவரா அல்லது ரொனால்டோ சிறந்தவரா என்ற விவாதத்தில் நண்பனையே ஒருவர் கொலை செய்துள்ளார்.
மும்பையில் வசிக்கும் நைஜிரியாவை சேர்ந்த ஒபினா மைக்கேல் (34), தனது பிறந்த நாளை நண்பன் சுக்வுமாவுடன்(22) கொண்டாடியுள்ளார். அப்போது இருவரும் மது அருந்தியுள்ளனர்.
தீவிர கால்பந்து ரசிகர்களான இருவரும் கால்பந்தில் மெஸ்ஸி சிறந்தவரா அல்லது ரொனால்டோ சிறந்தவரா என்ற விவாத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த விவாதம் கொஞ்ச நேரத்தில் கைகலப்பாக மாறியது.
இந்நிலையில் நிதானத்தை இழந்த சுக்வுமா தனது நண்பன் ஒபினா மைக்கேலின் கழுத்தை கண்ணாடி துண்டால் அறுத்துள்ளார். இதில் ஒபினா மைக்கேல் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து சுக்வுமாவை கைது செய்த பொலிசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Post a Comment