Header Ads



மகிந்தவின் கூட்டத்திற்குவந்த ஆட்கள், தொடர்பில் போலிப் பிரச்சாரம்


ராஜபக்சர்கள் மற்றும் மோசடி குழுவினரால் அண்மையில் ஹைட் மைதானத்தில ஏற்பாடு செய்யயப்பட்டிருந்த பேரணியில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை 11000 மாத்திரமே என அரசாங்க புலனாய்வு பிரிவினால் பொறுப்பானவர்களிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் ஐக்கிய தேசிய கட்சியினால் நடத்திய பேரணிக்கு அதனை விட அதிகமான மக்கள் கலந்து கொண்டுள்ளதாகவும், கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை 18000 என அரசாங்க புலனாய்வு பிரிவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு குழுக்களின் கூட்டங்களில் கலந்து கொண்டவர்களின் நிரல் முறையில் வரைவு படமொன்றை அமைத்த அரசாங்க புலனாய்வு பிரிவு, அந்த வரைவுக்கு அமைய ராஜபக்சர்களுக்காக வந்தவர்களின் எண்ணிக்கை குறைவானதெனவும் அவர்களின் பிரச்சாரம் போலியானதெனவும் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.