Header Ads



மகிந்தவின் "அலுவலக" பௌத்த விகாரையில் மைத்திரி, வரவேற்புக்கும் நன்றி கூறினார்

பாதாள உலக குழுக்களை அடக்குமாறு தாம் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த்துள்ளார்.

நாராஹென்பிட்டி அபயராம விகாரையில் ஜனாதிபதி இன்று /06/ இதனை கூறியுள்ளார்.

மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயற்படும் நபர்களுககு எதிராக சட்டத்திற்கு உட்பட்டு கூடியளவிலான நடவடிக்கைகளை எடுக்குமாறு தாம் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

நாராஹென்பிட்டி அபயராம விகாரையின் அறநெறி பாடசாலையின் 78 வது ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு வைபவம் என்ற இன்று நடைபெற்றதுடன் அதில் பிரதம அதிதியாக ஜனாதிபதி கலந்து கொண்டார்.

அங்கு உரையாற்றிய ஜனாதிபதி வைபவத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்து அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தை கண்டு மகிழ்ச்சியடைந்ததாகவும் அபயராம விகாரதிபதி முருத்தொட்டுவே ஆனந்த தேரருக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய ஜனாதிபதி, வளர்ச்சியடைந்த நாடுகளில் வாழும் மக்களின் முகங்களில் சிரிப்பை காண முடியாது.

அந்நாடுகள் பௌத்த சமயத்தை பின்பற்ற ஆரம்பித்துள்ளன. மனிதர்கள் பௌதீக ரீதியாக முன்னேற்றம் அடைந்திருப்பதை காணமுடிந்தாலும் மனரீதியான குழப்ப நிலையில் முன்னேற்றங்களை காண முடியவில்லை என்றார்.

அதேவேளை அங்கு உரையாற்றிய முருத்தொட்டுவ ஆனந்த தேரர், அறநெறி பாடசாலையின் 78 வது ஆண்டு விழாவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டமைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

அபயராம விகாரதிபதி மகிந்த ராஜபக்சவின் தீவிர ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

2..............

எனினும், அபயாராம விஹாரைக்கு தொடர்ச்சியாக செல்லும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்றைய தினம் அங்கு பிரசன்னமாகியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடிதமொன்றின் ஊடாக மாத்திரமே ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாக அபயாராம விஹாரையின் விஹாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

தான் முன்னாள் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்திருந்ததாகவும், அவர் சமூகமளிக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அபயாராம விஹாரைக்கு வருகைத் தந்த முதலாவது அரசத் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என முருத்தெட்டுவே ஆனந்த தேரர் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.