பயங்கரவாதத்தை மண்டியிடச் செய்வேன் - எர்துகான் சூளுரை
துருக்கிய தலைநகர் அங்காராவில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதல் ஒன்றில் 36 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, பயங்கரவாதத்தை மண்டியிடச் செய்யப்போவதாக அந்த நாட்டின் அதிபர் ரெசப் தைய்ப் எர்தோவான் சூளுரைத்துள்ளார்.
முக்கிய போக்குவரத்து மையமான குவன் பூங்கா பகுதியில் நடந்த இந்த
தாக்குதலில் நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்ததுடன், தாக்குதலாளிகளில்
ஒருவராவது கொல்லப்பட்டுள்ளார்.
இந்த தாக்குதலின் சூத்திரதாரிகளாக
நம்பப்படும் குர்து அமைப்பான பிகேகேயின் இராக்கில் உள்ள இலக்குகளை
துருக்கிய விமானங்கள் குண்டுவீசி தாக்கியுள்ளன.
வெடிபொருள்
கிடங்குகள் மற்றும் தங்குமிடங்கள் உட்பட 18 இலக்குகள் மீது 11 போர்
விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக இராணுவம் கூறியுள்ளது. அதேவேளை,
துருக்கியில் தென்கிழக்கு பகுதியில் துருக்கிய இராணுவம் தேடுதல் நடத்தும்
பகுதிகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எந்தக் குழுவும் அங்காரா தாக்குதலுக்கு உரிமை கோரவில்லை, ஆனால் அரசாங்கம் பிகேகே மீதே குற்றஞ்சாட்டுகிறது.
நடைமுறை உலகில் எகிப்தின் முர்சி அவர்களுக்குப் பின் தோன்றிய ஓரளவு சிறந்த ஆளுமையாக Edorgan ஐ கூறலாம்.
ReplyDelete