இஸ்லாஹ் டிரஸ்ட் நிறுவனத்தின், ஜனாஸா விழிப்புணர்வு நிகழ்ச்சி
இஸ்லாஹ் டிரஸ்ட் நிறுவனம் லெஸ்டரில் வசிக்கும் இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு மத்தியில் பல ஆக்க பூர்வமான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அதன் பலதரப்பட்ட வேலைத்திட்டங்களில் முக்கியமான ஒன்றான இலங்கை முஸ்லிம்கள் தமது ஜனாஸா கடமைகளை தங்கு தடையின்றியும், இலகுவாகவும் செய்து கொள்வதற்காக 'JANAZA PROJECT' எனும் ஒரு மாபெரும் திட்டத்தை ஒரு வருடத்திற்கு முன் ஆரம்பித்து வைத்து இதுவரை கிட்டத்தட்ட நூரு குடும்பங்களை (100) தன்னகத்தே அங்கத்தவர்களாக கொண்டு இயங்கிக் கொண்டிருக்கின்றது.
இலங்கை நாட்டைப் போல் அல்லாது ஐக்கிய இராச்சியத்திலே ஜனாஸா கடமைகளை செய்வதற்கு பாரியளவு பணச்செலவு மற்றும் பல சட்ட விதிமுறைகள் காணப்படுவதனால் இவ்வனைத்தையும் இலகுபடுத்தி அழகிய முறையில் அந்த ஜனாஸா கடமைகளை செய்வதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இத்திட்டத்தின் ஒருவருட பூர்த்தியை முன்னிட்டு அங்கத்தவர்கள் மற்றும் அங்கத்தவர்கள் அல்லாத அனைவருக்குமான ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியை சென்ற வாரம் ஞாயிறு (06/03/2016) அன்று மிகவும் சிறப்பாக இஸ்லாஹ் டிரஸ்ட் நிறுவனம் நடாத்தி முடித்தது. இதில் கலந்து கொண்டவர்களின் பலதரப்பட்ட சந்தேகங்களுக்கான தெளிவுகள் வழங்கப்பட்டன. மேலும் கலங்து கொண்ட அனைவரும் இதுபோன்ற நிகழ்ச்சியை பெண்களுக்கும், வயதுவந்த சிறுவர்களுக்கும் நடாத்துமாறு வேண்டிக்கொண்டனர்.
குறிப்பு: இஸ்லாஹ் டிரஸ்ட் அமைப்பானது லெஸ்டர் மாநகர ஆட்சியின் கீழ் தம்மை ‘Funeral Arranger’ ஆக பதிவு செய்து கொண்டுள்ளது.
Post a Comment