Header Ads



"பிரதேச வாதத்தை வளர்க்கும் பிசாசு"

-எம்.கமால் சப்ரி-

பொதுவாக அரச கட்டமைப்பில் பிராந்திய காரியாலயமென்பது ஒரு பிராந்தியம் அல்லது மாவட்டத்திற்கு ஒன்றாக காணப்படும் ஆனால் அம்பாறை மாவட்டதில் சற்று வித்தியாசமாக  தேசிய நீர் வழங்கல் சபைக்கு அம்பாறையில் ஒரு பிராந்திய காரியாலயமும் அக்கரைப்பற்றில்  ஒரு பிராந்திய காரியாலயமும் இவற்றிற்கு மேலாக தற்போது 3வது பிராந்திய காரியாலயம் ஒன்றும் கல்முனையில் நிறுவப்படவுள்ளது.

இக் கல்முனை பிராந்திய காரியாலயத்திறகான நிருவாக பிரிவு அக்கறைப்பற்றிலிருந்து பிரித்தெடுக்கப்படவுள்ளதால் இவ்விடயமேஇன்று அக்கரைப்பற்றில் பேசு பொருளாக மாறி அக்கரைப்பற்று - கல்முனை என்ற இரு ஊர்களிடையே பிரதேச வாதத்தை வளர்க்கும் பிசாகாக மாறி இருக்கின்றது 

அக்கரைப்பற்றில் அமைந்துள்ள இப்பிரதேச காரியாலயம் மூலம் விஷேட பிரதிபலன்கள் எதுவும் தனிநபர்களுக்கு கிடைப்பதில்லை ஆனால் இப்பிரதேசத்தின் பௌதீக உட்கட்டமைப்பு வளர்ச்சியில் பங்களிப்பு மிக்கதாக காணப்படும், இப்பிராந்திய காரியாலயமானது அக்கரைப்பற்றில் உள்ள மாவட்ட மட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மத்திய அரசின் கீழுள்ள ஒரே ஒரு நிறுவனமாகும்,  இக் காரியாலயத்தை அக்கறைப்பற்றின்  பொதுத்துறை வளமாக பார்க்கும் இம் மக்கள் சில திட்டமிட்ட சூட்சிகளின் மூலம் கல்முனையை நோக்கி நகர்த்தப்படுகின்றதா என கேழ்விக்குறியுடன் அங்கலாய்ந்து கொண்டிருப்பதனை காணக்கூடியதாகவுள்ளது

தேசிய நீர் வழங்கல் சபையின் பிராந்திய காரியாலயம் ஒன்று அமையப்பெறுதல், தரம் இழக்கப்படுதல், வேறொரு பிராந்திய காரியாலயத்துடன் இணைக்கப்படுதல் என்பன பிரதானமாக  அரசியல் செல்வாக்கு நீர் வழங்கல் இணைப்புக்களின் எண்ணிக்கை  வருமானம் / செலவு (Regional office operational cost) என்பவற்றில் தங்கியிருக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் பொலனறுவை மாவட்டத்திற்கு கூட இன்றுவரை தேசிய நீர் வழங்கல் சபைக்கான ஒரு பிராந்திய காரியாலயமும் கிடையாது அனுராதபுரம் மாவட்டத்தில் இயங்கும் பிராந்திய காரியாலயமே பொலனறுவை மாவட்டத்தையும் முகாமைத்துவம் செய்கின்றது, 

இவ்வாறான ஒரு கட்டமைப்புதான் இன்றுவரை உள்ள சூழ்நிலையில் தான் இற்றைக்கு 7 வருடங்களுக்கு முன்னர் முன்னாள் அமைச்சர் அதாவுள்ளாவினால் அம்பாறை மாவட்டத்தில் அம்பாறையில் அமைந்துள்ள பிராந்திய காரியாலயத்திற்கு மேலதிகமாக இன்னொரு காரியாலயத்தை அக்கரைப்பற்றில் நிறுவினார் இச் செயற்பாடுக்கு தேசிய நீர் வழங்கல் சபையின் உள்ளும் JVP சார் தொழிற் சங்கமும் கடுமையாக எதிர்த்தன அவர்களது அதிருப்தியையும் மீறி அம்பாறை பிராந்திய காரியாலயம் சிங்கள பிரதேச முகாமைத்துவத்திற்கும் அக்கறைப்பற்று பிராந்திய காரியாலயம் பொத்துவில் முதல் மருதமுனை வரையிலான பகுதிக்கு உட்பட்ட முகாமைத்துவ பிரிவாக்கி அம்பாறையை விட கூடிய இணைப்பு கொண்ட தாகவும் இலங்கையின் சிறந்த வருமானம் Recovery  கொண்டதாக மாற்றம் பெற்றது,

இந்நிலையில் தான் இன்று அம்பாறை மாவட்டத்தில் மூன்றாவது பிராந்திய காரியாலயம் கல்முனையில் நிறுவப்படவுள்ளதுடன் அக் காரியாலயம் உதவி பொது முகாமையாளர் காரியாலயமாகவும் AGM பதவி நிலை அந்தஸ்து வழங்கப்படவுள்ளது அம்பாறையில் இருந்து வரும் எதிர்ப்பை தவிர்ப்பதற்காக தற்போது கிழக்கு மாகாணத்திற்கு ஒரே ஒரு காரியாலயமாக திருகோணமலையில் உள்ள பொது முகாமையாளர் காரியாலயம் இரண்டாக்கப்பட்டு அம்பாறை பிராந்திய காரியாலயம் பொது முகாமையாளர் GM காரியாலயமாக்கப்படவுள்ளது.

இந்நிலையில் அக்கறைப்பற்று பிராந்திய காரியாலயத்தின் நிலை என்ன ? 

அக்கரைப்பற்றிலிருந்து பிரித்து கல்முனையுடன் இணைக்கப்படவுள்ள சம்மாந்துறை,சாய்ந்தமருது,கல்முனை,மருதமுனை போன்ற பிரதேசங்கள் கடந்த 15 வருடங்களுக்கு முன்னரே குடிநீர் இணைப்புக்கள் வழங்கப்பட்ட பிரதேசங்கள் கூடுதலான இணைப்புகளும் கூடுதல் வருமானமும் இப்பிரதேசங்களில் இருந்தே கிடைக்கின்றன இப் பிரதேசங்கள் அக்கறைப்பற்றில் இருந்து பிரியும் போது அக்கறைப்பற்று பிராந்திய  காரியாலயம் இணைப்புக்களை கொண்டதாக காணப்பட்டாலும் வருமானம் குறைந்த  காரியாலயமாக மாற்றமடையும் இந்நிலையில்  தொடர்ச்சியாக குறைந்த வருமானமுடைய, நட்டத்தில் இயங்கும் பிராந்திய காரியாலயமானது சபையின் ஒரு முகாமைத்துவ குழு கூட்டத்தில் "தொடர்ந்து கொண்டு செல்வதா அல்லது வேறு ஒரு பிராந்திய காரியாலயத்துடன் இணைப்பதா"   என்ற தீர்மானம் மேற்கெள்ள வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படும்;

 அம்பாறையில் 3 பிராந்திய காரியாலயமா ! என அதிருப்தியுடன் பார்க்கும் முகாமைத்துவம் எப்போது சந்தர்ப்பம் கிடைக்கும் என காத்திருந்தவர்களுக்கு இந்த ஒரு காரணம் மட்டுமே போதும் தற்போது அக்கரைப்பற்றில் இயங்கிக் கொண்டிருக்கும் பிராந்திய காரியாலயத்திற்கு வழங்கப்படாத புதிதாக கல்முனையில் உருவாக்கப்படவுள்ள பிரதி பொது முகாமையாளர் பிராந்திய காரியாலயத்துடனோ அல்லது  அம்பாறையில் உள்ள பொது முகாமையாளர்  பிராந்திய காரியாலயத்துடனோ இணைக்கப்படலாம் ? ஆனால் அமைச்சர் றவூப் ஹக்கீம் அவர்கள் நீர் வழங்கல் அமைச்சராக இருக்கும் வரை நடக்காது தனது அமைச்சு காலத்திற்குள் நடந்தால் அதன் மூலம் அக்கரைப்பற்று மக்களின் எதிர்ப்பை சம்பாதிக்க விரும்ப மாட்டார் 

அதே போல் தற்போது அக்கறைப்பற்றில் அரசியல் அதிகாரம் கொண்ட மாகாண சபை உறுப்பினர் தவம் அவர்களும் அமைதியாகவே இருப்பார் ஏனெனில் இது தொடர்பில் ஒரு வசனமேனும் கதைப்பாராயின் கல்முனையின் ஒரு சாதாரண பொதுமகன் கூட "நாங்கள் ஒட்டு மொத்தமாக வாக்களித்ததனால் மாவட்டத்தின் முதல் நிலையில் மாகாண சபைக்கு அனுப்பிய தவம் அவர்கள் அக்கறைப்பற்றில் உள்ள பிராந்திய காரியாலயத்திற்கு இடையூறு இல்லாமல் எங்களுக்கு வரும் பிராந்திய காரியாலயத்தை தடுப்பதற்கு முயற்சிக்கிறார்" என்ற எதிர்ப்பு அலை ஏற்படுமானால் முன்னாள் அமைச்சர் அதாவுள்ளா வுக்கு ஏற்பட்டது போன்று அக்கறைப்பற்றுக்கு வெறியே தனது அரசியல் எதிர்காலம் பாழாகிப் போய்விடக் கூடாது என்பதில் அமைதியாகவே இருந்து விடுவார் 

அக்கறைப்பற்றில் இருந்து எதிர்காலத்தில் இக்காரியாலயம் அகற்றப்படுவதற்கான திட்டமிடப்பட்ட சூட்சி என கருதி இடம்பெறும் ஆர்ப்பாட்டங்களோ, எதிர்ப்பு நடவடிக்கைகளோ, அமைதியாக வாழும் அக்கறைப்பற்று - கல்முனை சாதாரண பொதுமக்கள் மீது வெறுப்புணர்வுகளையும் பிரதேச வாதத்தையுமே விதைக்கும்   எனவே இவ்வாறான சூட்சுமமான முறையில் திட்டங்களை தீட்டி திரைமறைவில் காய்களை நகர்த்தி விட்டு அரசியல் லாபம் தேடும் யாராயினும் கண்டிக்கத்தக்கது

No comments

Powered by Blogger.