தற்போதைய ஜனாதிபதியும் அதற்கு பொறுப்பாளி - மகிந்த ராஜபக்ச
அன்றைய அரசாங்கம் செய்த வேலைகள் குறித்து தற்போதைய அரசாங்கம் குற்றம் சுமத்தி வருகிறது எனவும் தான் அந்த வேலைகளை தனித்து செய்யவில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட அன்றைய அமைச்சரவையுடன் இணைந்து அவற்றை செய்ததால், தற்போதைய ஜனாதிபதியும் அதற்கு பொறுப்பாளி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எம்பிலிப்பிட்டியவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தற்போதைய ஜனாதிபதிக்கு அந்த பொறுப்பை தட்டிக்கழிக்க முடியாது. இதனால், எதிர்க்கட்சியை திட்டிக்கொண்டிருக்காது மக்களுக்கு வேலை செய்யுங்கள்.
2001 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்த போது, விவசாயத்திற்கான நீர்ப் பாசன கால்வாய்களுக்கு பணத்தை செலவிடப் போவதில்லை எனக் கூறியிருந்தது.
வயல்களை நிரப்பி. தொழிற்சாலைகளை நிர்மாணிக்க வேண்டும் என்பதே இதற்கு காரணம். எனினும் மக்கள் அந்த கொள்கையை நிராகரித்தனர்.
ஆனால், தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரையும் இணைத்துக் கொண்டு அந்த கொள்கையை செயற்படுத்த போகின்றனர் என்பதே எமக்குள்ள கவலையாகும்.
நாங்கள் பசளை நிவாரணங்களை வழங்கியதால், அரிசி உற்பத்தியில் நாடு தன்னிறவு அடைந்தது. பசளை நிவாரணங்களை வழங்காதிருந்தால், அந்த நிலைமை உருவாகி இருக்காது.
பசளைகளில் நச்சு பொருட்கள் இருப்பதாக கூறி தற்போது பசளை நிவாரணத்தை நிறுத்தியுள்ளனர். பசளைக்கு பதில் பணம் தருவதாக கூறுவது வெறும் கதை.
நெல் உற்பத்திகளை விற்பனை செய்ய முடியாதுள்ளது. பிள்ளைகள் வீட்டில் பட்டினியில் அழும் போது, 25 ஆயிரம் ரூபாவை கொடுத்து, பசளையை கொள்வனவு செய்வார்களா, பிள்ளைகளுக்கு சாப்பாடு கொடுப்பார்களா?.
விவசாயி மது அருந்துபவராக இருந்தால், அந்த பணத்தை அதற்கு பயன்படுத்துவார்.
வைத்தியசாலைகளில் தற்போது மருந்துகள் இல்லை. தனியார் மருந்தகத்தில் வாங்கி கொள்ளுமாறு எழுதி கொடுக்கின்றனர். இதுதான் உண்மை. எனினும் எம்மீதே குறைக்கூறுகின்றனர் என முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

You can not say like that now. Because lot of Ministers had pointed out your regiment big mistakes. But you had avenged and warned them including president my3
ReplyDeleteநீங்கள் ஆட்சியில் இருக்கும் போது எங்களுக்கு ஒன்றும் செய்யாவிட்டாலும் பரவாயில்லை. எங்களை நிம்மதியாக வாழ விடும்படி தானே கேட்டோம். பொது பல செனாக்களை ஏவி விட்டு பொலீவியா போனதை மறக்க முடியவில்லை.
ReplyDelete