யாழ்ப்பாண முஸ்லிம்களின், மீள்குடியேற்றம் தொடர்பில் ஆராய்வு
யாழ். கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளன கொழும்புக் கிளை ஏற்பாட்டில் யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் மற்றும் வீடமைப்பு திட்டங்கள் குறித்து கொழும்பில் கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது.
ஹிறா ஸ்த்தாபகத் தலைவர்அமீன் ஹாஜியாரின் வீட்டில் நடைபெற்ற இக்கூட்டத்தில் டாக்டர் ரம்ஸி, தொழில் அதிபர் நியாஸ் ஹாஜி, ஜமாலிக், பொறியியலாளர் சய்ரக், மஹ்ருப் மாஸ்டர், அனஸ்கோ நவ்சாத் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.
எதிர்வரும் காலங்களில் கொழும்பு மற்றும் அதனையண்டிய பகுதிகளில் யாழ்ப்பாண முஸ்லிம்களையும் உள்ளீர்த்து, இச்செயற்பாட்டை முன்னெடுப்பதற்கும் இக்கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment