அடையாளம் தெரியாத விலங்கு கண்டுபிடிப்பு
சிங்கராஜ வனப்பகுதியில் அடையாளம் தெரியாத விலங்கு ஒன்று இனங்காணப்பட்டுள்ளது.
வனப் பகுதியின் வெத்தாகல மற்றும் பொதுபிடியவுக்கு இடையிலுள்ள பனபொல - கோஸ்குலன பிரதேசத்தில் இந்த விலங்கு இனங்காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வால் இன்றி மஞ்சள், கருப்பு மற்றும் பழுப்பு நிற ரோமங்களையுடைய இந்த விலங்கு, 3 கிலோ 300 கிராம் நிறையுடையது எனவும், 60 சென்றிமீற்றர் வரையான நீளமுடையது எனவும் வனஜீவராசிகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்திற்கு தொடர்பு கொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளது.
எங்க ஊர்ல இது பிரபல்யமான ஒன்று இதற்க்கு கொடுப்புளி என்று சொல்லப்படும் இரவு நேரத்தில் மாத்திரம் உலாவக்கூடிய இது கோழிகளை கூட்டோடு அளித்து விடுவதில் படு பயங்கர அபாயகரமானது யாராவது பார்க்க விரும்புவோர் பொலன்னறுவ பகுதிக்கு வர சொல்லவும்
ReplyDeleteஇது கொடும்புலி அல்ல. ஆங்கிலத்தில் அதற்கு Lynx என்று கூறுவார்கள்.அது ஏறத்தாழ ஒரு பெரிய அளவு வீட்டுப்பூனை போலிருக்கும் அதன் காதுகள் நுனியில் சிறிது தூக்கலாக கூர்மையாக இருக்கும்.
ReplyDelete