உலகில் செல்வாக்கான கடவுச்சீட்டு ஜேர்மன் முதலிடம், இலங்கைக்கு 96 ஆவது இடம்
உலகின் செல்வாக்கான பாஸ்போர்ட் பட்டியலில் இலங்கை மிகவும் மோசமாகப் பின்தள்ளப்பட்டு, உதவாக்கரை பாஸ்போர்ட்களின் வரிசையில் இடம்பிடித்துள்ளது.
உலகின் செல்வாக்கான மற்றும் உதவாக்கரை பாஸ்போர்ட்கள் தொடர்பான பட்டியல் ஒன்று சில தினங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டுள்ளது.
வீசா இன்றி பயணம் மேற்கொள்வதற்கான வசதி, ஒன்அரைவல் வீசா வசதி, ஒன்லைன் வீசா வசதி என்பவற்றைக் கொண்டு இந்த தரப்படுத்தல் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் ஜேர்மனியர்கள் 175 நாடுகளுக்கு வீசா இன்றிப் பயணம் செய்வதற்கான அனுமதியைக் கொண்டிருப்பதன் காரணமாக அந்நாட்டின் பாஸ்போர்ட் உலகின் செல்வாக்கான பாஸ்போர்ட்களின் வரிசையில் முதலிடம் பிடித்துள்ளது.
176 நாடுகளுக்கு வீசா இன்றிப்பயணம் செய்வதற்கான வசதியைக் கொண்டுள்ள ஸ்வீடன் பாஸ்போர்ட் இந்த வரிசையில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.
104 இடங்களைக் கொண்ட பட்டியலில் 1 முதல் 93 வரையான இடங்களைப்பிடித்துள்ள நாடுகளின் பாஸ்போர்ட்கள் செல்வாக்கான வரிசையில் இடம்பிடித்துள்ளன.
94 தொடக்கம் 104 வரையான இடங்களில் வரிசைப்படுத்தப்பட்டுள்ள நாடுகளின் பாஸ்போர்ட்கள் உதவாக்கரை பாஸ்போர்ட்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இதில் 94வது இடத்தில் லைபீரியா இடம்பிடித்துள்ளது. ஒருகாலத்தில் உலகின் மோசமான போர்க்குற்ற நாடாக இந்நாடு சித்தரிக்கப்பட்டிருந்தது. இந்நாட்டின் முன்னாள் அதிபர் சார்ள்ஸ் டெயிலர் என்பவர்தான் போர்க்குற்றங்கள் தொடர்பில் முதன்முதலாக தண்டிக்கப்பட்ட அரச தலைவராகும்.
உதவாக்கரை பாஸ்போர்ட்களின் வரிசையில் இலங்கை 96வது இடத்தைப் பிடித்துள்ளது.
இலங்கையர்கள் 39 நாடுகளுக்கு மட்டுமே முன்கூட்டிய வீசா அனுமதிப்பத்திரம் இன்றி பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment