விட்டமின் மாத்திரைகளை உட்கொண்ட, 93 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
பண்டாரவளை, பூணாகலை, எம்பிட்டிகந்த தமிழ் மகா வித்தியாலயத்தில் விட்டமின் மாத்திரைகளை உட்கொண்ட 93 மாணவர்கள், நோய்வாய்ப்பட்ட நிலையில் பண்டாரவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹல்துமுல்லை சுகாதாரப் பரிசோதகர்களினால் நேற்று வியாழக்கிழமை (03) மாணவர்களுக்கு விட்டமின் மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன.
இம்மாத்திரைகளை உட்கொண்ட தரம் 6,7 மற்றும் 8 இல் கல்வி பயிலும் மாணவர்களே வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment