Header Ads



பாராளுமன்றத்திற்கு நேற்று படையெடுத்த 7 ஆயிரம் மாணவர்கள்


நாடாளுமன்றத்துக்கு ஒரேநாளில், மாணவ, மாணவிகள் 7 ஆயிரம் பேர் வருகைதந்தனர் என்று படைக்கல சேவிதர் திணைக்களம் அறிவித்துள்ளது. 

நாடளாவிய ரீதியில் உள்ள 40 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளே நாடாளுமன்றத்துக்கு நேற்று வியாழக்கிழமை வருகைதந்திருந்தனர். 

பாடசாலை மாணவர்களுக்கு மேலதிகமாக, நாடாளுமன்றத்தை பார்வையிடுவதற்கு பொதுமக்கள், ஆயிரம் பேரும் வருகைதந்துள்ளனர். நாடாளுமன்றம், நேற்றுக்காலை 9.30க்கு கூடி, இரவு 7.30க்கு நிறைவடைந்தது. காலைமுதல் இரவு வரையிலும், மக்கள் கலரி நிரம்பியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments

Powered by Blogger.