77 பேரை கொன்றவன், அரசாங்கம் தன்னை மோசமாக நடத்துவதாக குற்றச்சாட்டு
நார்வேவில் பல கொலைகள் செய்த குற்றவாளியான அனொர்ஷ் பெஹ்ரிங் ப்ரேவிக், தன்னை அரசாங்கம் மோசமாக நடத்துவதாக தாக்கல் செய்த வழக்கின் விசாரணைக்காக நீதிமன்றம் வந்தபோது நாஜி வணக்கம் செலுத்தியுள்ளார்.
நார்வேவில் எழுபத்து ஏழு பேரை கொன்ற குற்றத்திற்காக தண்டனை அனுபவிக்கும் கொலைக் குற்றவாளி நீதிமன்றத்தில் நுழையும்போது நாஜி வணக்கம் செலுத்தியுள்ளார்.
அரசு தன்னை மனிதத்தன்மையற்ற நிலைமையில் வைத்துள்ளதாக வலதுசாரி தீவிரவாதியான இவர் கூறிவருகிறார்.
அவர் செய்த கொடூரமான குற்றங்களையும் மீறி, அவரை மனிதாபிமானத்துடன் நடத்துவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டாயிரத்து பதினோறாம் ஆண்டில் மத்திய ஆஸ்லோவில் குண்டுவைத்த இவர், யுடியா தீவில் உள்ள தொழிலாளர் இளைஞர்கள் முகாமில் இருந்தவர்களை சரமாரியாக சுட்டிருந்தார். இதில் எழுபத்து ஏழு பேரை அவர் கொன்றிருக்கிறார்.
கடந்த 2012ஆம் ஆண்டில் அவருக்கு 21 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது.
Post a Comment