Header Ads



எர்பான் அலியை கடித்துக்குதறிய நாய் - 70,000 பவுண்ட்ஸ் இழப்பீடு வழங்க உத்தரவு

பிரித்தானிய நாட்டில் 6 வயது சிறுவனை கடித்து குதறிய குற்றத்திற்காக சிறுவனுக்கு 70,000 பவுண்ட் இழப்பீடு வழங்க நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

வேல்ஸில் உள்ள Gabalfa நகரில் Erfan Ali என்ற சிறுவன் தனது பெற்றோர்களுடன் வசித்து வருகிறான்.

சிறுவனின் குடும்பம் வசிக்கும் வீட்டிற்கு அருகே உள்ள மற்றொரு வீட்டில் சுமார் 85 கிலோ எடையுள்ள ராட்சத நாய் ஒன்று வசித்து வந்துள்ளது.

இந்நிலையில், கடந்த 2011ம் ஆண்டு வீட்டிற்கு வெளியே உள்ள புல்வெளியில் சிறுவன் விளையாடிக்கொண்டு இருந்துள்ளான்.

அப்போது, ஒரு சிறிய வேலி வழியாக நுழைந்த அந்த நாய் சிறுவனின் மீது பாய்ந்து கடித்து குதறியுள்ளது.

சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு வந்த அவனது பெற்றோர் நாயை விரட்டிவிட்டு சிறுவனை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர்.

நாய் கடித்து குதறியதில் சிறுவனின் கைகள், கால்கள், உதடு, கண் இமைகள் மற்றும் கன்னங்களில் ஆழமான காயங்கள் ஏற்பட்டன.

மேலும், மருத்துவமனையில் சுமார் 170 தையல்கள் போட்டு சிறுவனுக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். ஆனால், தற்போது சிகிச்சை முடிந்திருந்தாலும் வாழ்நாள் முழுவதும் மறையாத தழும்புகள் சிறுவனுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக சிறுவனின் தந்தை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் நாயின் உரிமையாளருக்கு நீதிமன்றம் 4 மாதங்கள் சிறை தண்டனை விதித்தது.

எனினும், வாழ்நாள் முழுவதும் தழும்புகளுடன் துயரமான வாழ்க்கை வாழும் தனது மகனுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என தந்தை நீதிமன்றத்தில் கோரியிருந்தார்.

தந்தையின் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு 70,000 பவுண்ட்(1,44,64,182 இலங்கை ரூபாய்) இழப்பீடு வழங்க வேண்டும் என தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.