சவூதி அரேபியாவில் இந்த ஆண்டின் 70-ஆவது மரண தண்டனை நிறைவேற்றம்
சவூதியில் கொலைக் குற்றவாளிக்கு ஞாயிற்றுக்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இந்த ஆண்டில் நிறைவேற்றப்படும் 70-ஆவது மரண தண்டனை இது என்பது குறிப்பிடத் தக்கது.
இது தொடர்பாக சவூதி உள்துறை அமைச்சகம் சார்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
அப்துல்லா அல்-சுமைரி என்பவர் தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்த அலா அல்-ஜஹ்ரானிக்கு ஜெட்டா நகரில் ஞாயிற்றுக்கிழமை 06-03-2016 மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது எனத் தெரிவித்துள்ளது. கொலை, போதை மருந்து கடத்தல், பாலியல் தாக்குதல், ஆயுதம் ஏந்திக் கொள்ளையில் ஈடுபடுவது, மத நிந்தனை, பயங்கரவாதம் உள்ளிட்ட கொடும் குற்றங்களுக்கு சவூதியில் மரண தண்டனை விதிக்கப்படுகிறது. பெரும்பாலும் தலையைத் துண்டித்து தண்டனை நிறைவேற்றப்படுகிறது.
இந்த ஆண்டு தொடங்கி இதுவரை 70 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. பயங்கரவாதக் குற்றச்சாட்டுக்காக ஜனவரி 2-ஆம் தேதி 47 பேருக்கு அந்நாட்டில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத் தக்கது. அந்நாட்டில், கடந்த ஆண்டு மொத்தம் 153 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
Post a Comment