Header Ads



நாடு முழுவதும் 7 1/2 மணித்தியால மின்சாரத்தடை (விபர அட்டவணை இணைப்பு)

அடுத்து வரும் இரு தினங்களுக்கு நாடு பூராகவும் 7 1/2 மணித்தியால மின்சாரத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும்  புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த மின்சாரத்தடை இரு பகுதிகளாக மேற்கொள்ளபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி நாளை புதன்கிழமையும் வியாழக்கிழமையும் குறித்த மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

காலை 7 மணி முதல் நண்பகல் 12.30 மணிவரையும் மாலை 6 மணிமுதல் இரவு 8 மணிவரையும் ஒரு பகுதி மின்வெட்டும் நண்பகல் 12.30 மணி முதல் பிற்பகல் 6 மணிவரையும் இரவு 8 மணி முதல் இரவு 10 மணிவரையும் மற்றை பகுதி மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதன் படி பகல் வேளைகளில் 5 1/2 மணித்தியாலங்களும் இரவு வேளைகளில் 2 மணித்தியாலங்களும் நாளொன்றுக்கு மின்தடை அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

3 comments:

  1. பாடசாலை மாணவர்கள் கடுமையாகபாதிக்கப்படுவார்கள்

    ReplyDelete
  2. ஜெனரேட்டர் முதலீடு செய்த கம்பனிகளின் பணப் பெட்டிகள் காய்ந்து போய்க் கிடக்குதாம். அத நிறப்பத்தான் இப்படியொரு கடிவாளத்தப் போடுறாங்களாக்கும். என்னமோ நடக்குது உலகத்துல.. அது பத்திரிகக்காரங்களுக்கு புரியதப்ப்போ... சாதாரண சாமாணியர்களுக்கு மட்டும் எப்படிங்கோ புரியப்போகுது?

    ReplyDelete
  3. Yahapalanya proves again their inefficiency....................

    ReplyDelete

Powered by Blogger.