ஜனாதிபதி அலுவலகத்தின் செலவுகள் 60 விகிதம் குறைக்கப்பட்டுள்ளது - மைத்ரிபால
ஜனாதிபதியாக ஒரு வருடம் கடமைப் புரிந்ததில் நிதி ஒழுக்கம் மற்றும் நிதி முகாமைத்துவம் தொடர்பாக தமது பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்றியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
இன்று ஜனாதிபதி அலுவலகத்தின் செலவுகள் நூற்றுக்கு அறுபது விகிதம் குறைக்கப்பட்டுள்ளதுடன், வெளிநாட்டுப் பயணங்களுக்காக தாம் ஒருபோதும் தனிப்பட்ட விமானங்களை எடுத்துச் செல்லாது சாதாரண பயணிகள் விமானத்திலேயே மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட ஒரு பிரிவினருடன் சென்று வந்துள்ளதையும் ஜனாதிபதி நினைவுகூர்ந்தார்.
இன்று ஜனாதிபதி அலுவலகத்தின் செலவுகள் நூற்றுக்கு அறுபது விகிதம் குறைக்கப்பட்டுள்ளதுடன், வெளிநாட்டுப் பயணங்களுக்காக தாம் ஒருபோதும் தனிப்பட்ட விமானங்களை எடுத்துச் செல்லாது சாதாரண பயணிகள் விமானத்திலேயே மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட ஒரு பிரிவினருடன் சென்று வந்துள்ளதையும் ஜனாதிபதி நினைவுகூர்ந்தார்.
இலங்கை விமானச் சேவை பாரிய நஷ்டத்திற்கு முகம்கொடுத்திருப்பது கடந்த காலத்தில் இருந்த தலைவர்கள் அவர்களது நண்பர்களுடன் வெளிநாட்டுப் பயணங்களுக்காக தனியான விமானங்களை எடுத்துக்கொண்டு சென்று பல நாட்கள் அதனை அந்த நாடுகளில் நிறுத்தி வைத்திருந்தமையால் ஏற்பட்டவையாகுமென்றும் மக்கள் பணத்தை விரயமாக்கும் இத்தகைய செயற்பாடுகளுக்கு தமது ஆட்சிக் காலப்பகுதியில் முடிவுகட்டியுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இன்று (31) நிதி அமைச்சின் புதிய கட்டிடத் தொகுதியை திறந்து வைத்து உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் இதனைத் தெரிவித்தார்.
நிதி ஒழுக்கம் மற்றும் நிதி முகாமைத்துவம் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுவது அரசியல்வாதிகளைப்போன்று அரசாங்க அதிகாரிகளினதும் பொறுப்பாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, வருடாந்த இலக்குகளை அடைந்துகொள்வதற்கு வருடத்தின் ஆரம்பம் முதலே பொறுப்புக்களை நிறைவேற்றவேண்டியதன் அவசியத்தையும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் நிதி ஒழுக்கமும் சிறந்த முகாமைத்துவமும் பேணப்பட வேண்டியதன் அவசியத்தையும் வழியுறுத்தினார்.
1400 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த 07 மாடி கட்டிடத் தொகுதி அதிநவீன வசிகளைக் கொண்டிருப்பதோடு, இது முழுமையாக நம்நாட்டு பொறியியலாளர்களின் பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமசிறி தர்ம மகா சங்க சபையின் மகா நாயக்க தேரர் இத்தேபானே தம்மாலங்கார தேரர், கிரிந்தே அஸ்சஜி தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரும் ஏனைய சமய தலைவர்களும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, அமைச்சர்களான நிமல் சிறிபால த சில்வா, ரிஷாத் பதுர்தீன், டி.எம்.சுவாமிநாதன், இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.அபேகோன், நிதி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
Post a Comment