Header Ads



மரண தண்டனையை அறிவித்தபோது, அமைதியாக நின்ற கொலையாளி - 60 வருட கடூழியச் சிறைத்தண்டனை


-எம்.இஸட்.ஷாஜஹான்-

கொட்டதெனியா  சிறுமி சேயா சதவ்மியை கடுமையான முறையில் பாலியல் வல்லுறவு செய்து படுகொலை செய்த  எதிரிக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பா ஜானகி ராஜரத்ன மரண தண்டணை  விதித்து இன்று (15) தீர்ப்பளித்தார். அத்துடன்  இதற்கு மேலதிகமாக எதிரிக்கு மொத்தமாக 60 வருட கடூழியச் சிறைத்தண்டனையையும்  நீதிபதி விதித்தார்.

இலந்தாரி பேடிகே சமன் ஜயலத் என்பவரே  மரண தண்டணை  விதித்து தீரப்பளிக்கப்பட்டவராவார்;.

பிரதிவாதிக்கு எதிராக நான்கு குற்றச்சாட்டுக்கள் சட்டமா அதிபரினால் சுமத்தப்பட்டிருந்தது.  விசாரணைகளின் இறுதியில் இந்த நான்கு குற்றச்சாட்டுக்களிலும் எதிரி குற்றவாளியாக காணப்பாட்டார்.  முதலாவது குற்றச்சாட்டுக்காக 20 வருட கடூழியச் சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது.  இரண்டாவது குற்றச் சாட்டுக்காக 20 வருட கடூழியச் சிறைத் தண்டனையும் 25 ஆயிரம் ரூபா அபராதமும்; விதிக்கப்பட்டது.  மூன்றாவது குற்றச்சாட்டுக்காக 20 வருட கடூழியச் சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபா அபராதமும்; விதிக்கப்பட்டது. மேற்படி மூன்று குற்றச்சாட்டுக்களுக்குமான அபராதத் தொகையை செலுத்த தவறின் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் மேலதிகமாக தலா ஒருவருட கடூழியச் சிறைத் தண்டனை (மொத்தமாக 3 வருடங்கள்) அனுபவிக்க வேண்டும் என்று நீதவான் உத்தரவிட்டார்.

நீதிவான் தீர்ப்பை அறிவித்த போதும் அதன் பின்னரும் பிரதிவாதி எந்தவித பிரதிபலிப்பையும் காட்டாமல் அமைதியாக இருந்தார். கொட்தெனியாவ படலகம், அக்கரங்கஹ பிரதேசததைச் சேர்ந்த  ஐந்து வயதான சேயா சதவ்மி  என்ற சிறுமி கடந்த வருடம் செப்டமப்ர் மாதம் 11 ஆம் திகதி அவரது வீட்டிலிருந்து கடத்திச் செல்லப்பட்டு கடுமையான முறையில் பாலியல் வல்லுறவு செய்து படுகொலை செய்பட்டார். சிறுமியின் சடலம் 13 ஆம் திகதி  மீட்கப்பட்டது.

இந்நிலையில் சந்தேகத்தின் பேரில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரதிவாதியின் சகோதரராவார். அவர் கொண்டையா என அழைக்கப்பட்ட துனேஸ் பிரியசாந்த என்பவராவார். மற்றையவர் 17 வயதுடைய   இளைஞனாவான். மரபணு பரிசோதனை அறிக்கையின்படி  குற்றம் நிரூபிக்கப்படாமையினால் சந்தேக நபர்கள் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.  பிரதிவாதியான இலந்தாரி பேடிகே சமன் ஜயலத்; மரபணு பரிசோதனை அறிக்கையின்படி குற்றவாளியாகக் காணப்பட்டார்.

இந்நிலையில் அவருக்கு எதிராக தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு விசாரணைகளின் முடிவில் குற்றவாளியாக காணப்பட்டதை அடுத்து மரண தண்டனை விதித்து தீர்ப்ளிக்கப்பட்டது.

இன்றைய தினம் நீதிமன்றில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

1 comment:

  1. மரண தண்டனை விதிப்பதில் பயனில்லை. மரண தண்டனை உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.