Header Ads



பங்குச் சந்தை பாரியளவில் சரிவு, 600 பில்லியன் நஷ்டம், நல்லாட்சிக்கு பாரிய நெருக்கடி


கடந்த 14 மாதங்களினுள் கொழும்பு பங்கசந்தையின் நட்டம் 600 பில்லியனையும் கடந்துள்ளதாக பங்கு சந்தை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

2015ஆம் ஆண்டும் ஜனவரி மாதம் 09ஆம் திகதி புதிய அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்த போது அனைத்து பங்குகளின் விலை சுட்டெண் 7,605ஆக இருந்தது. 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 09ஆம் திகதி காலை வரையில் விலை சுட்டெண் 5,802 ஆக இருந்தது. இதனடிப்படையில் 23.7 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.

உலக பொருளாதாரம் பலவீனமடைதல், நாணய மதிப்பு குறைவடைதல் மற்றும்  வட்டி விகிதங்கள் அதிகரிப்பு ஆகியவைகள் மந்த நிலைக்கு காரணமாகியுள்ளதாக பங்குசந்தை தரகர்கள் தெரிவித்துள்ளனர்.

ஈட்டிய இலாபங்கள் மீதான வரி தொடர்பில் பிரதமர் நாடாளுமன்றில் கருத்து வெளியிட்டதனை தொடர்ந்து இரண்டு நாட்களுக்குள் பங்கு சந்தையின் மதிப்பு 200க்கும் அதிகமான, அதாவது நூற்று நான்கு வீதத்தால் குறைவடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு தற்போதைய அரசாங்கம் தெளிவான நம்பிக்கையுடன் முகம் கொடுத்துள்ளது. வெளிநாட்டு முதலீடுகளை நாட்டிற்கு கொண்டு அபிவிருத்திகளை மேற்கொள்ளும் வரையில் பங்கு சந்தையில் குறிப்பிடத்தக்க வகையிலான வளர்ச்சியை காணமுடியாதென பொருளியலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

துறைமுக நகர திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கும், நாணய மதிப்பினை நிலையாக கொண்டு வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்தல் ஆகியவைகளே அவ்வாறான வளர்ச்சிக்கு காரணமாக அமையும் என்பது அவர்களின் கருத்தாக உள்ளது.

No comments

Powered by Blogger.