சிரியாவில் 6 மாதங்களில் 2,000 குடிமக்களை கொன்ற ரஷ்யா
ஐ.எஸ் மற்றும் அல்-கொய்தா தீவிரவாதிகளுக்கு எதிராக சிரியாவில் போரிட்டு வரும் ரஷ்ய படைகள் இதுவரை 2,000 அப்பாவி குடிமக்களை கொன்று குவித்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிரியாவில் உள்ள மனித உரிமைகள் அமைப்பு மற்றும் யுத்தம் கண்காணிப்பு குழுவினர் நேற்று முன் தினம் 15.03.2016 ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில், ‘சிரியாவில் ரஷ்ய ராணுவத்தினர் தாக்குதலை தொடர்ந்த 6 மாதங்களில் 2,000 குடிமக்களை கொன்றுள்ளதாக’ அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
சிரியாவில் மக்கள் நடமாட்டம் உள்ள சந்தைப் பகுதிகள், மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் குடியிருப்புகள் மீது ரஷ்ய போர் விமானங்கள் தாக்குதலை நடத்தியதே இந்த உயிரிழப்பிற்கு காரணம் என தெரியவந்துள்ளது.
இந்த புகாரை மறுத்துள்ள ரஷ்யா ‘சிரியாவில் உள்ள தீவிரவாதிகள் பகுதிகள் மீது மட்டுமே தாக்குதல் நடத்தியதாக’ தெரிவித்துள்ளது.
ஆனால், ‘ரஷ்ய போர் விமானங்கள் குடியிருப்புகள் மீது வேண்டுமென்றே தாக்குதலை நடத்தியதாக’ மனித உரிமைகள் அமைப்பு மற்றும் யுத்தம் கண்காணிப்பு குழுவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
சிரியாவில் உள்ள தனது நாட்டு ராணுவத்தினரை திரும்ப பெற்றுக்கொள்வதாக கடந்த ஞாயிறு அன்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், ‘அவசியம் ஏற்பட்டால் சிரியாவில் உள்ள தீவிரவாதிகள் மீது மீண்டும் தாக்குதலை நடத்த தங்களது ராணுவத்தினர் எந்த நேரத்திலும் அந்நாட்டிற்கு அனுப்பப்படலாம்’ என அதிபர் விளாடிமிர் புடின் இன்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Post a Comment